தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 1830 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது. இது கடந்த மூன்று அமர்வுகளாகவே சற்றே ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது மேம்பட்டு வரும் நிலையில், வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருவதை என காட்டுகின்றது.
தொடர்ந்து டாலரின் மதிப்பானது 104.57 என்ற சரிவினைக் கண்டுள்ள நிலையில், தங்கம் விலையானது சற்றே ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
தொடர்ந்து அமெரிக்காவின் பத்திர சந்தையானது சற்றே ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், தேவையானது இன்னும் இருண்ட நிலையிலேயே இருந்து வருகின்றது. இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
டெக்னிக்கல் பேட்டர்ன்
தொடர்ந்து பண்டமென்டல் ரீதியாக மட்டும் அல்லாது, டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. தங்கத்தின் கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
குறைந்த விலையில் வாங்கலாம்
தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. கடந்த சில அமர்வுகளாகவே ஷார்ட் கவரிங் செய்யப்பட்ட நிலையில்,விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் குறைந்த விலையில் வாங்கவும் சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இது உச்சத்தில் இருந்து 3400 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு இருந்த நிலையில், வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.45 டாலர் அதிகரித்து, 1838.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் அதே விலையில் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.56% அதிகரித்து, 21.192 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையை உடைத்துள்ளது. இது புல்லிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 91 ரூபாய் குறைந்து, 55,385 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 160 ரூபாய் குறைந்து, 62,804 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை மற்றும் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து, 5235 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து, 41,880 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 31 ரூபாய் அதிகரித்து, 5711 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 310 ரூபாய் அதிகரித்து, 57,110 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 70.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 70,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..



Click it and Unblock the Notifications