சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. ஈரான் போர் தொடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அமெரிக்க டாலர் வலுபெற்றதால் உலக சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது. அது தான் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தங்கத்தின் விலை உயர்ந்தது. ஆனால் அதன் பின்னர் விலை இறங்குமுகமாக தான் இருக்கிறது. குறிப்பாக திங்கள் தொடங்கி வியாழக்கிழமையான இன்று வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தங்கம் விலை குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தங்கம் விலை குறைவது இதுவே முதல்முறையாகும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. சென்னை, மதுரை, கோவை ,திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1,05,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது தங்கம் விலை ஒரு சவரனுக்கு 240 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.
திங்கள்கிழமை தொடங்கி இன்று வரையிலான 4 நாட்களில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 480 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதுவே ஒரு சவரனுக்கு 3,840 ரூபாய் விலை சரிந்துள்ளது. வரலாற்று உச்சபட்ச விலையான ஒரு சவரன் 1.33 லட்சத்தில் இருந்து தங்கம் விலை சவரனுக்கு 28,000 ரூபாய் குறைந்துள்ளது.
24 கேரட் தங்கமும் விலை குறைந்து ஒரு கிராம் 14,422 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,44,220 ரூபாய்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,040 ரூபாய்க்கும் ஒரு சவரன் 88,320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாறவில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஈரான் போர் மற்றும் சர்வதேச அளவில் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்தது ஆகிய காரணங்களால் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் இன்னும் விலை குறையுமா என காத்திருக்காமல் இப்போதே முதலீடு செய்து வைப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

