தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை குறைந்து பொது மக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை ,மதுரை ,திருச்சி, கோவை என பிரதான நகரங்களில் இன்று ஒரு சவரன் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மே மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திடீரென உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு செவ்வாய்கிழமை நேற்று விலை குறைந்தது இன்றைய தினமும் விலை சரிவடைந்துள்ளது.

சென்னையில் திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து 14,780 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை 50 ரூபாய் விலை குறைந்து 14,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு 80 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,17,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 640 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. இன்றைய தினம் சென்னையில் ஒரு ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,17,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. செவ்வாய், புதன் ஆகிய இந்த இரண்டு நாட்களில் சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 130 ரூபாயும், ஒரு சவரனுக்கு 1040 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது.
சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 87 ரூபாய் குறைந்து 15,982 ரூபாய்க்கும் 10 கிராம் 1,59,820 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் 70 ரூபாய் விலை சரிந்து12,290 ரூபாய்க்கும் ஒரு சவரன் 98,320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சியிலும் சென்னை விலைக்கே தங்கம் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பல நாட்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் இதே விலையில் இருக்கிறது.
ஈரான் போர் தொடர்பான நிகழ்வுகள் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றத்தை நிகழ்த்தி வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் ஈரான் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு ஒப்பந்தம் ஏற்படும் சூழல் காணப்பட்டது, ஆனால் நேற்று திடீரென அமெரிக்கா ஈரான் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இன்று மீண்டும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

