தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக விலை சரிந்துள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 195 ரூபாய் குறைந்து 13,015 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1560 ரூபாய் விலை சரிந்து 1,04,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை குறைந்திருப்பது மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று, இன்று என இந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 240 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1920 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 10 கிராமுக்கு 2,400 ரூபாய் விலை குறைந்துள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,198 ரூபாய்க்கும் 10 கிராம் 1,41, 980 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,650 ரூபாய்க்கும் ஒரு சவரன் 85,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை சரிந்து ஒரு கிராம் 200 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை குறைந்து 2 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
உலக சந்தையில் தங்கம் விலை குறைந்தது தான் இந்தியாவிலும் தங்கம் விலை சரிய காரணம். அமெரிக்க பணவீக்க தரவுகள் வெளியாகியுள்ள நிலையில் அது மேற்கொண்டு அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு நடவடிக்கைக்கு வித்திடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 4,045 டாலர்களாக இருக்கிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.41 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது.
வட்டி விகிதம் உயர்ந்தால் பத்திரங்கள் அதிக லாபம் தரும் என கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து முதலீடுகளை எடுத்து பத்திரங்களில் போடுகின்றனர். இதுவே தங்கம் விலை சரிய முக்கிய காரணம். இனி வரும் நாட்களும் தங்கம் விலை சரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

