2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஆனால் ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. தங்கம் கடந்த 52 வாரங்களில் அதிகபட்சமாக 3,167 டாலரை எட்டியது. தற்போது சுமார் 3,107 டாலருக்கு விற்பனையாகிறது. இது மிகப்பெரிய சரிவு இல்லை என்றாலும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கும் மத்தியில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனாலும் இது போன்ற சமயத்தில் தங்கம் விலை குறைந்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 4-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி, ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் 9,164 ரூபாய்க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,400-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,920-க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் 1 சவரனுக்கு அதிகபட்சமாக 1,280 ரூபாய் குறைந்துள்ளது.

ஏன் திடீரென தங்கம் விலை குறைகிறது?: கடந்த 12 மாதங்களில் தங்கம் கணிசமான ஏற்றத்தை கண்டது. கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கம் விலை 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டிருக்கும் திடீர் சரிவு ட்ரம்ப் ஏப்ரல் 2-ஆம் தேதி அறிவித்த ரெசிபிராக்கல் வரிவிதிப்புக்கு பின்னர் ஏற்பட்டுள்ளது.
ரெசிபிராக்கல் வரி என்பது அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரி விதிக்கும். ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று ட்ரம்ப் வெவ்வேறு நாடுகளுக்குமான வரி விகிதங்களை அறிவித்தார். அவற்றில் சில ஏப்ரல் 5 முதல் அமலுக்கு வந்துள்ளன. அதே நேரம் இந்த ரெசிபிராக்கல் வரி ஏப்ரல் 9 முதல் சில நாடுகளில் அமலுக்கு வருகிறது. இந்த வரி முறையால் நுகர்வோரின் தாக்கம் என்ன?, நிறுவனங்களுக்கான தாக்கம் என்ன? மற்றும் அரசாங்கத்திற்கான தாக்கம் என்ன? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருந்து வருகிறது. இது பெரும்பாலானவர்களுக்கு ஒரு பிரபலமான முதலீட்டு தேர்வாக அமைகிறது. நிச்சயமற்ற காலங்களில் முதலீட்டாளர்கள் லாபத்தில் இருக்கும் சொத்துக்களை விற்று, மற்ற சந்தைகளில் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
தற்போதைய உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்று சில நிபுணர்கள் கணித்துள்ளனர். பங்குச்சந்தைகளில் காணப்படும் நிலையற்ற தன்மை 2025-ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையை உச்சத்தில் வைத்திருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் மத்திய வங்கிகளின் அதிகப்படியான தங்க கொள்முதல் மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய தளர்வு ஆகியவை தங்கத்தின் விலை அதிகரித்தன. இதன் விளைவாக 2024-ஆம் ஆண்டு மட்டும் தங்கம் சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications