கொரோனாவுக்கு மத்தியிலும் நாளை அட்சய திருதியை கொண்டாடப்படவுள்ளது. இப்படி ஒரு நெருக்கடியான நிலையானது தமிழர்களின் நீண்டகால பழக்கத்தினையே மாற்றியுள்ளது எனலாம். ஏனெனில் எப்போதும் கடைகளில் சென்று நகை வாங்கும் மக்கள், கடந்த ஆண்டு முதல் தங்கத்தினையும் ஆன்லைனில் வாங்க பழகிக் கொண்டுள்ளனர்.
எனினும் இதுவும் ஒரு வகையில் நல்ல விஷயம் தான். ஏனெனில் செய்கூலி, சேதாரம் இல்லை. பாதுகாப்பானது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலவரத்திற்கு ஏற்ப உடனடியாக வாங்கி, விற்றுக் கொள்ள முடியும்.
தங்கத்தின் தூய தன்மை பற்றிய கவலை இல்லை. இப்படி ஒவ்வொரு விதத்திலும் பலன்களை கொடுக்கும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நல்ல விஷயம் தானே. அதுவும் அட்சய திருதியை நாளில் பிடித்தமான தங்கத்தில் முதலீடு என்பது மிக நல்ல விஷயம் தானே.
தங்கம் விலை குறைவு
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் கடந்த இரண்டு அமர்வுகளாக தங்கம் விலையானது குறைந்து வருகின்றது. இன்று ரமலான் என்பதால் காலை அமர்வு விடுமுறையாகும். எனினும் மாலை அமர்வில் தெரியவரும். இதேசமயம் தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து 1821 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
இது நல்ல வாய்ப்பு
எம்சிஎக்ஸில் கடந்த இரு அமர்விலேயே சற்று சரிவினைக் கண்டு இருந்த நிலையில், இன்று மாலை இன்னும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த வாரம் முழுக்க தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில அமர்வுகளாக குறைந்து வருவது, அட்சய திருதியைக்கு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
Array
அதோடு ஒட்டுமொத்த டிரெண்டும் ஏற்றம் காணும் என்பது போல் இருப்பதால், இது மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் அட்சய திருதியைக்கு வாங்க நினைப்பவர்களுக்கும், குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்கும் இது சரியான வாய்ப்பே. இது ஒரே கல்லில் இரு மாங்காய் எனலாம். ஏனெனில் விலையும் குறைவு. அதே நேரம் குறைந்த விலையில் அட்சய திருதியைக்கும் வாங்கலாம்
லாபம் உறுதி
கடந்த அமர்வில் அமெரிக்க நுகர்வோர் விலை குறையீடு சந்தைக்கு சாதகமாக வந்த நிலையில், டாலரின் மதிப்பு வலுவானது. இதனால் சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டது. அதோடு பணவீக்க விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்கம் ஒரு சிறந்த ஹெட்ஜிங் பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு நோக்கில் வாங்கினாலும் சரி, சம்பிரதாயங்களுக்காக வாங்கினாலும் நிச்சயம் லாபம் என்பது உறுதி.
அடுத்த முக்கிய லெவல்கள்
தங்கத்தின் மீடியம் டெர்ம் லெவல் 46,800 - 48,000 ரூபாயாகும். இதே நீண்டகால நோக்கில் 55.000 - 60,000 ரூபாய் செல்லலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் நிபுணர்கள் தங்கத்தினை வாங்கவே பரிந்துரை செய்கின்றனர். ஏனெனில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆக குறைந்த விலையானது முதலீட்டாளர்களுக்கு வாங்க நல்ல வாய்ப்பு என கூறுகின்றனர்.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!



Click it and Unblock the Notifications