இந்திய பங்குச்சந்தைகள் இன்று, மார்ச் 31ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி பண்டிகை முன்னிட்டு முழுமையாக மூடப்பட்டுள்ளன. BSE மற்றும் NSE ஆகிய இரு முக்கிய சந்தைகளிலும் இன்றைய தினம் பங்கு வர்த்தகம் நடைபெறாது. ஈக்விட்டி, ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ், கமாடிட்டி மற்றும் SLB போன்ற அனைத்து பிரிவுகளிலும் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முழுமையான வர்த்தகம் தொடங்கும்.
இதன் காரணமாக சர்வதேச சந்தையின் தாக்கம் இந்திய தங்கம், வெள்ளி விலையில் முழுமையாக எதிரொலிக்கவில்லை. சென்னை ரீடைல் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வை பதிவு செய்துள்ளன. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 109 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,913 ரூபாயாக வர்த்தகமாகிறது. இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 13,670 ஆக உள்ளது, 18 கேரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து 11,460 ரூபாயாக வர்த்தகமாகிறது.

வெள்ளி விலையும் சரிவு பாதையில் உள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.250 மற்றும் கிலோக்கு ரூ.2,50,000 என்ற அளவில் விலை குறைந்துள்து. அதே நேரத்தில், பிளாட்டினம் விலை மட்டும் கணிசமாக உயர்ந்து, கிராமுக்கு ரூ.5,777 மற்றும் 10 கிராமுக்கு ரூ.57,770 என்ற அளவில் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,565.81 டாலர் வரை உயர்ந்து, தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஒன்றரை வாரத்தில் காணப்பட்ட உயர்ந்த நிலையாகும். ஆனால் 4,600 டாலர் அளவீட்டை தாண்டுவதில் இன்னும் போராட்டம் கண்டு வருகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் சூழ்நிலையில், டொனால்டு டிரம்ப் தனது ராணுவ நடவடிக்கைகளை குறைக்க தயார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்து, பணவீக்கம் பற்றிய அச்சம் தற்காலிகமாக குறைந்துள்ளது.
இதன் விளைவாக, அமெரிக்க அரசுத்துறை பத்திர வருமானம் (Treasury yields) குறைந்துள்ளது. இதனால், அமெரிக்க டாலரில் முதலீடு செய்துள்ளவர்கள் லாபத்தை எடுத்துக் கொள்ளும் நிலை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்து. இது அனைத்தும் தங்கம் விலை உயர்வுக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
இருப்பினும், ஈரான் அமெரிக்கா மத்தியிலான நேரடி பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை. இதேவேளையில் அமெரிக்கா தொடர்ந்து வளைகுடா நாடுகளின் பிராந்தியத்தில் ராணுவ படைகளை அதிகரித்து வருகிறது, தாக்குதல்களையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலை கச்சா எண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தும் வாய்ப்பை உருவாக்குகின்றன. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் நீடிக்கிறது. இப்படி போர் பதற்றம் தினமும் பெரும் தாக்கத்தை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் உருவாக்கி வருகிறது.
உலகளாவிய மத்திய வங்கிகள், குறிப்பாக அமெரிக்காவின் Federal Reserve, வட்டி விகிதங்களை உயர்த்தும் போக்கைத் தொடரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீது விற்பனை அழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications