உலகம் முழுவதும் எந்தவொரு பொருளாதார சிக்கல் வந்தாலும், பாதுகாப்பான முதலீடு என்று நம்பப்படுவது தங்கம் மட்டுமே. இந்த சந்தை நிச்சயமற்ற காலங்களில் நிதி பாதுகாப்பிற்கு தங்கம் மிக சிறந்த சொத்தாக திகழ்கிறது. சமீபத்தில், பண்டிகை காலத்தின் காரணமாக 10 கிராம் தங்கம் ரூ.1,32,294 என்ற சாதனை விலையை தொட்டது. ஆனால், தற்போது விலை சுமார் 7 சதவீதம் குறைந்து ரூ.1,23,180 ஆக சரிந்துள்ளது.
தங்கம் விலை சரிவுக்கு என்ன காரணம்..?: இதுகுறித்து மோதிலால் ஓஸ்வால் நிதிச் சேவைகள் நிறுவனத்தின் ஆய்வாளர் மனவ் மோடி பேசுகையில், "தங்கம் இந்த ஆண்டு ஏற்கனவே மிக வேகமாக உயர்ந்துவிட்டது. அதனால், முதலீட்டாளர்கள் அதிக லாபம் கிடைத்தவுடன் அதை விற்றுப் பணமாக்குவது என்பது இயல்புதான். இந்த காரணத்தினாலேயே விலை சற்று தணிந்துள்ளது" என்று கூறுகிறார்.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்த போதிலும், தொழிலாளர் சந்தை வலிமையாக இருப்பதால், உடனடியாக மேலும் பெரிய அளவில் வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்பில்லை என்ற நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. இந்த குழப்பம்தான் தங்கம் மற்றும் வெள்ளி விலையின் ஏற்றத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்தி உள்ளது.
தங்கத்தின் ஏன் முதலீடு செய்ய வேண்டும்..?: அமெரிக்காவில் உருவாகும் பொருளாதார தரவுகள், உலகளாவிய அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை சேமிப்பது ஆகியவை தங்கத்தின் விலைக்கு வலுவான அடித்தளமாக இருக்கும். நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் விலை உயரும் போக்கு நிச்சயம் நீடிக்கும்.
முதலீட்டாளர்கள், தங்கம் விலை திடீரென உயரும்போது லாபத்தை விற்றுப் பதிவு செய்யுங்கள். விலை குறையும்போது, மீண்டும் சிறிது சிறிதாக வாங்குங்கள். இந்திய சந்தையைப் பொறுத்தவரை, ரூ.1,18,000 முதல் ரூ.1,20,000 வரை ஒரு வலுவான ஆதரவு நிலையாக உள்ளது. இந்த விலை குறையாமல் இருந்தால், அடுத்த ஓராண்டில் தங்கம் மீண்டும் ரூ.1,30,000 முதல் ரூ.1,37,000 வரம்பை நோக்கி உயர வாய்ப்புள்ளது.
மத்திய வங்கிகள் ஆதரவு : உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள், குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தொடர்ந்து தங்கத்தை வாங்கி சேமிக்கின்றன. இது, உலகம் பொருளாதார ரீதியில் ஸ்திரமற்றதாக இருக்கும்போது, தங்கம் ஒரு சிறந்த சேமிப்பு கருவி என்பதை நிரூபிக்கிறது. மத்திய வங்கிகளின் இந்த தேவை, தங்கம் விலை குறையாமல் நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்க உதவும்.
வெள்ளியும் முக்கியம் : தங்கம் போலவே வெள்ளியும் பாதுகாப்பான முதலீடாகவும் இருப்பதோடு, தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கும் உதவுகிறது. சோலார் பேனல் உற்பத்தி, எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு போன்ற சுத்தமான எரிசக்தித் துறைகளில் வெள்ளியின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தொழிற்துறைத் தேவை மற்றும் முதலீட்டுத் தேவை இரண்டும் இருப்பதால், வெள்ளியின் மதிப்பும் வரும் மாதங்களில் உயர வாய்ப்புள்ளது.
ETF-களில் முதலீடு : ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலான முதலீட்டு இலக்கு உள்ளவர்களுக்கு, தங்க மற்றும் வெள்ளி ETF-களில் முதலீடு செய்வது நல்லது. இது, வெளிப்படையான, எளிமையான மற்றும் செலவு குறைந்த முதலீட்டு வழியாகும். உங்கள் முதலீட்டை பல பிரிவுகளாக பிரிக்கும் (Diversification) உத்தியின் ஒரு பகுதியாக, தங்கம் மற்றும் வெள்ளி ETF-களில் ஒரு பகுதியை ஒதுக்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று மனவ் மோடி கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications