குறைந்த விலையில் தங்கம் வாங்க இது சரியான சான்ஸ்.. குஷியில் முதலீட்டாளர்கள்..!

தங்கம் விலையானது இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தொடர்ந்து கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்தது. புதிய உச்சத்தினை கூட எட்டியது. ஆனால் கடந்த சில வாரங்களாக முதலீட்டாளர்களை குஷிபடுத்தும் விதமாக மீண்டும் சரிவினைக் கண்டு வருகின்றது.

இன்றும் முதலீட்டாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, சர்வதேச சந்தையில் விலை சரிவில் காணப்படுகின்றது. எனினும் ஆபரணத் தங்கம் விலையானது சென்னையில் சற்றே அதிகரித்து காணப்படுகின்றது.

தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது தங்கம் விலையானது அதிகரித்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகின்றது. ஆக இது குறைந்த விலையில் தங்கம் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

குறைந்த விலையில் தங்கம்

குறைந்த விலையில் தங்கம்

நடப்பு மாத தொடக்கத்தில் தங்கம் விலையானது சவரனுக்கு 44,040 ரூபாய் வரையில் ஏற்றம் கண்டது. எனினும் இன்று சவரன் விலையானது சென்னையில் 41,656 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இம்மாத தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது சவரனுக்கு 2384 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. ஆக இன்று தங்கம் விலையானது சற்றே அதிகரித்திருந்தாலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து நல்ல சரிவிலேயே காணப்படுகின்றது.

இனியும் விலை குறையலாம்

இனியும் விலை குறையலாம்

இம்மாதத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 6% சரிவில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு சரிவினை காணலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதத்தின் மத்தியில், வரவிருக்கும் அமர்விலும் வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். ஆக இது மேற்கொண்டு விலை குறைய காரணமாக அமையலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டிய டாலர்

கவனத்தில் கொள்ள வேண்டிய டாலர்

டாலரின் மதிப்பானது அதன் 7 வார உச்சத்தில் இருந்து இன்று சற்றே தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். டாலரின் மதிப்பு சரிவால், மற்ற கரன்சி தாரர்களுக்கு இது வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது மீண்டும் 55,250 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உடைத்தால் 55,080 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷார்ட் கவரிங் இருக்கலாம்

ஷார்ட் கவரிங் இருக்கலாம்

பல்வேறு பொருளாதார குறிகாட்டிகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது கடந்த அமர்விலேயே ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. இது மேற்கொண்டு ஷார்ட் கவரிங் ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். வெள்ளி விலையும் 4 வார சரிவில் காணப்படுகிறது. ஆக இதுவும் குறைந்த விலையில் வாங்க வாய்ப்பாக இருக்கலாம். இதிலும் ஷார்ட் கவரிங் என்பது இருக்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4.15 டாலர்கள் குறைந்து, 1820.65 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.60% குறைந்து, 20.668 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று அதே விலையில் காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கலம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 91 ரூபாய் குறைந்து, 55,385 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 160 ரூபாய் குறைந்து, 62,804 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 5207 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 41,656 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 5680 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து, 56,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 69.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 69,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+