தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் வர்த்தக நாளே இன்ப அதிர்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரியுமா? இந்தியாவில் விலை எப்படியுள்ளது. இனி என்னவாகும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் இன்று ஆசிய சந்தையிலேயே சரிவில் காணப்படுகின்றது. ஆக இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவில் தங்கம், வெள்ளி விலை

சரிவில் தங்கம், வெள்ளி விலை

எப்படியிருப்பினும் தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 12.30 டாலர்கள் குறைந்து, 1798.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

இதே வெள்ளி விலையானது கிட்டத்தட்ட 1% குறைந்து, 23.508 டாலர்களாகவும் காணப்படுகின்றது.இவ்விரண்டும் மீடியம் டெர்மில் இன்னும் சற்று அழுத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த வாரம் முழுக்க ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளதே என்ன காரணம்?

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது, இன்று சற்றே ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் என்னவாகும்?

வட்டி விகிதம் என்னவாகும்?

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதம் குறித்து, டிசம்பர் 13 - 14 அன்று நடக்கவுள்ள கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது சற்றே அழுத்தத்தில் காணப்படுகின்றது.

புராபிட் புக்கிங்

புராபிட் புக்கிங்

அமெரிக்க டாலரின் மதிப்பானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், இன்றும் மீண்டும் தங்கத்தில் புராபிட் செய்ய வழிவகுக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். அதோடு முதலீட்டாளர்கள் டிசம்பர் 13 மற்றும் டிசம்பர் 14 அன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் கவனம் செலுத்தலாம் என்றும், இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தங்கம் விலையானது குறைய வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?

இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?

இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் 54,000 ரூபாய்க்கு மேலாக வர்த்தகமாகியது. இதே இன்று இந்திய சந்தையிலும் சற்று குறைந்து காணப்படுகிறது.

இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் விலையானது, 135 ரூபாய் குறைந்து, 54,160 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியுள்ளது. இதே வெள்ளியின் விலையானது, 217 ரூபாய் குறைந்து, கிலோவுக்கு 67,821 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5045 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து , 40,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5447 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 54,470 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 0.20 பைசா குறைந்து, 72.80 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 72,800 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+