தங்கம் விலை என்பது தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை என்பது உச்சம் தொட்டுள்ளது. மார்ச் மாத காலாண்டில் தங்கம் விலையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக பல இந்தியர்கள் சாதாரண தங்க நகைகளுக்குப் பதில், வைரம் பதிக்கப்பட்ட நகைகளை தேர்ந்தெடுத்து வருவதாக முன்னணி சில்லறை விற்பனையாளர்களின் விற்பனைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனையாளரும் வருமானம் மற்றும் சந்தை மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்படும் டைட்டன் கம்பனி லிமிடெட் நிறுவனத்தில், வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகளின் விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்ளூர் நகை வியாபாரத்தில் வைர நகைகள் 30% பங்கை பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தியாவின் இரண்டாவது பெரிய தங்க நகை விற்பனையாளரான கல்யாண் ஜுவல்லர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், வைர நகை விற்பனை 47.6% அதிகரித்துள்ளதாகவும், அதே காலத்தில் உள்ளூர் நகை விற்பனை 38% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 4-வது காலாண்டில், கல்யான் ஜுவல்லர்ஸுன் இந்திய வருவாயில் 31% பங்கு வைர நகைகளை பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்கோ (Senco) மற்றும் பி.என்.கத்கில் (PN Gadgil) நிறுவனங்களில் ஜனவரி - மார்ச் காலகட்டங்களில் வைர நகைகள் விற்பனை முறையே 38% மற்றும் 31% வளர்ந்துள்ளது. ஆனால், மொத்த வியாபாரம் முறையே 21% மற்றும் 5% மட்டுமே உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. சென்கோ நிறுவனத்தில் வைர நகைகள் 11% பங்கு பெற்றதாகவும், பி.என். கத்கில் நிறுவனத்தில் 8% பங்கு பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனைப் புள்ளி விவரங்கள், பாரம்பரிய தங்க நகைகளை விட, நுட்பமான மற்றும் மலிவான விலையுள்ள வைர நகைகள் மீது மக்களின் விருப்பம் மாறி வருவதை காட்டுகிறது.
இதுதொடர்பாக கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் கூறுகையில், "கடைசி சில காலாண்டுகளில், வைரம் பதிக்கப்பட்ட தங்க நகைகள் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். தங்கம் விலை மிகவும் உயர்ந்திருக்கும்போது, வாடிக்கையாளர்கள் வைர நகைகளை தேர்வு செய்வது எளிதாகிறது" என்று அவரது தந்தையும் நிறுவனத்தின் MD ஆக இருக்கும் டி.எஸ். கல்யாணராமன் முன்னதாக கூறியிருந்தார். மேலும், கடந்த நிதியாண்டில் தங்க விலை 30% உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.
தங்கம் விலையை பொறுத்த வரை கடந்த நிதியாண்டில் 31% உயர்ந்துள்ளது. அதாவது, 2024 ஏப்ரல் 1ஆம் தேதிப்படி, 10 கிராம் தங்கம் ரூ.69,471ஆக இருந்த நிலையில், 2025 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரூ.91,190 ஆக உயர்ந்தது. 2025 - 26 நிதியாண்டிலும் இது மேலும் உயர்ந்து, வெள்ளிக்கிழமை ரூ.1,00,280 ஆக அடைந்தது. இந்தாண்டின் நான்காவது காலாண்டில், 'ஸ்டட் விகிதம்' 8% ஆக மேம்பட்டுள்ளது. அதே நேரத்தில் பதிக்கப்பட்ட வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு 30.8% அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது அதன் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக PN காட்கிலின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், நகர்ப்புற வாடிக்கையாளர்களிடையே சொலிடேர், லேசான காதணிகள் மற்றும் தினசரி உடைகள் வடிவமைப்புகளில் ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், இது பதிக்கப்பட்ட நகைப் பிரிவின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்தாண்டு, உலகளாவிய பொருளாதார மற்றும் புவியியல் சிக்கல்களால் தங்கத்தில் முதலீட்டாளர்கள் நுழைந்ததால் விலை தாறுமாறாக உயர்ந்தது. கல்யாண் ஜுவல்லர்ஸின் கூற்றுப்படி, பதிக்கப்பட்ட நகைப் பிரிவின் மொத்த லாப வரம்பு சாதாரண தங்கத்திற்கு 10 முதல் 14% வரை இருக்கும் நிலையில், பதிக்கப்பட்ட நகைகளுக்கு 30 முதல் 35% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!



Click it and Unblock the Notifications