அமெரிக்கா எடுத்த முடிவு.. இனி தங்கம் விலை தினமும் டான்ஸ் ஆடப்போகுது!

முதலீட்டு சந்தையில் தங்கம் நீண்ட காலத்திற்கு பின்பு முக்கியமான முதலீட்டாக மாறிவரும் வேளையில், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகமாக தொடர்ந்து வைத்திருக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.

இதனால் அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி விலை பெரும் தடுமாற்றத்தை எதிர்கொள்லும் என கணிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா எடுத்த முடிவு.. இனி தங்கம் விலை தினமும் டான்ஸ் ஆடப்போகுது!

தங்கம் விலை இன்று ஒரு நாளில் மட்டும் கிராமுக்கு 229 ரூபாய் வரையில் உயர்ந்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது தங்கம் மீண்டும் முக்கியமான முதலீட்டு கருவியாக மாறியுள்ளது. இன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 14,651 ரூபாயாக உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியிருக்கும் போர் அச்சம், அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை, பணவீக்க அச்சம் ஆகியவற்றுக்கு மத்தியில் குறுகிய காலத்திற்கு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்காது என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் தங்கம் முக்கிய முதலீட்டாக மாறுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் தங்கத்திற்கான அடுத்த சிக்னல் அமெரிக்கா - ஈரான் போரில் இருந்தும், பெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவில் தான் உள்ளது.

இதுக்குறித்து சாய்ஸ் ப்ரோக்கிங் நிறுவனத்தின் கமாடிட்டி ஆய்வாளரான பிங்கி யாதவ் கூறுகையில், ஈரான் - அமெரிக்கா போர், ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்காவின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, அதிகரிக்கும் பத்திர முதலீட்டின் மீதான வட்டி ஆகியவற்றுக்கு மத்தியில் தங்கம் முக்கிய முதலீடாக மாறி கடந்த 2 வாரமாக தங்கம் விலை தொடர்ந்து உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது என தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திரத்தின் லாபம் 2 வருட உயர்வை எட்டியதன் விளைவாக தங்கம் விலை MCX மற்றும் COMEX சந்தையில் தக்கம் விலை 2 வார அதிக விலைக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை உயர்வுக்கு அடிப்படை காரணமாக இருப்பது அமெரிக்காவின் தனியார் துறையில் பணியில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது மூலம் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளது உறுதியானது. இதன் விளைவாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேட துவங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+