அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு தங்கம் விலையில் எதிர்பாராத மாற்றம் பதிவாகியுள்ளது. ஈரான் போர் துவங்கிய நாளில் இருந்து தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை நேற்று நடந்து முடிந்த மிட்டேர்ம் தேர்தலில் அதிபராக இருக்கும் டிரம்ப்-ன் குடியரசு கட்சி செனட் மற்றும் உறுப்பினர்கள் சபை என இரண்டிலும் பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில் 3 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கத்தின் ஸ்பாட் விலை 4,051.42 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
அதாவது கச்சா எண்ணெய் சந்தை, பத்திர சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொகை தற்போது மீண்டும் தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை மீது திரும்பியுள்ளது.

ஆனால் கடந்த 6 மாதத்தில் ஏற்பட்ட தங்கம் விலை சரிவைப் பெரியளவில் பயன்படுத்திக்கொண்டது சாமானிய மக்களோ அல்லது முதலீட்டாளர்களோ இல்லை, மாறாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்துள்ளது.
இதேபோல் டிரம்ப்-ன் தோல்வி தீபாவளிக்கு முன்பு வந்திருக்கும் காரணத்தால் அடுத்த 4 நாட்களில் தங்கம் விலை தடாலடியாக உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் டாலர் மதிப்பு குறையும் காரணத்தால் பெரிய விலை உயர்வு வருவதைத் தடுக்கப்படும்.
இந்த நிலையில் சமீபத்தில் வோல்டு கோல்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் மத்திய வங்கி இந்த செப்டம்பர் காலாண்டில் மட்டும் 321 டன் தங்கத்தை வாங்கி குவித்துள்ளது.
பொதுவாக மத்திய வங்கிகள் செப்டம்பர் காலாண்டில் இவ்வளவு தங்காது, ஆனால் டாலர் ஆதிக்கத்தைக் குறைக்கவும், சொந்த நாணயத்தின் மதிப்பை உயர்த்தவும் அதிகளவில் தங்கத்தை வாங்கியுள்ளது.
மேலும் நடப்பு ஆண்டில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 675 டன் தங்கத்தை வாங்கி குவித்துள்ளது என வோல்டு கோல்டு கவுன்சில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்கள் எப்படி தங்கம் விலை அதிகமாக இருக்கும் போது நகையாகவும், நாணயமாகவும், காயின்களாகவும் வாங்கி குவித்தனரோ அதேபோல் மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிகளவில் வாங்கியுள்ளது.
இதன் மூலம் இனி வரும் காலகட்டத்தில் ஈரான் போர் அச்சம் குறைந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்தால் தங்கம் விலையும், பங்குச்சந்தை முதலீடும் தொடர்ந்து அதிகரிக்கும். இதேவேளையில் செப்டம்பர் காலாண்டில் உலகளவில் 1,369 டன் தங்கத்தை ஓவர் தி கவுன்டர் அடிப்படையில் விற்கப்பட்டு உள்ளது என WGC தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த வருடத்தின் முதல் 9 மாதத்தில் 3,881 டன் தங்கம் வர்த்தகமாகியுள்ளது, இதன் மொத்த மதிப்பு 566 பில்லியன் டாலராகும்.


Click it and Unblock the Notifications