தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி, பிளாட்டினம் விலையை பாருங்க.. இனி நகை வாங்கவே முடியாதா..?!!

தங்கத்தை நினைத்தால் மகிழ்ச்சி உண்டாவதை விடவும் சோகம் தான் உண்டாகிறது. இதற்கு முக்கியமான காரணம் தங்கத்தின் விலை தான், தொடர்ந்து 5 நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.

புதன்கிழமை MCX சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது மட்டும் அல்லாமல் 18 கேரட் முதல் 24 கேரட் தரத்திலான தங்கத்தின் விலை இன்று ஒரு நாளில் 10 கிராமுக்கு ரூ.600 முதல் ரூ.900 வரை அதிகரித்து அதன் வரலாற்று உச்சநிலையை எட்டி சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி, பிளாட்டினம் விலையை பாருங்க.. இனி நகை வாங்கவே முடியாதா..?!!

எம்சிஎக்ஸ் சந்தையில் டிசம்பர் காலாவதியாகும் பியூச்சர்ஸ் ஆர்டரின் தங்கம் விலை 62,600 ரூபாயைத் தாண்டியது, தற்போது 62,780 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரலாற்று உச்ச நிலையை அடைந்துள்ளது. தங்கம் தான் இப்படி என்றால் வெள்ளி, பிளாட்டினம் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை உயர்வால் மக்கள் வெள்ளி பொருட்கள் மற்றும் பார்கள், பிளாட்டினம் நகைகளை அதிகம் வாங்க துவங்கியதாலும், இந்த திருமண சீசனில் பெரும் பகுதி மக்கள் தங்கத்திற்கு மாற்றாக பிளாட்டினம் வாங்க துவங்கியதாலும், தங்கத்தின் விலை உயர்வை மேட்ச் செய்யும் வகையில் பிளாட்டினம் விலையும் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அமெரிக்க பொருளாதார தரவுகளில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் டாலர் மதிப்பு சரிந்து தங்கம் மீது முதலீடு குவிய துவங்கியது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் முக்கியமான நகரங்களில் ரீடைல் சந்தையில் தங்கம் விலை என்ன தெரியுமா..?

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 58,700 ரூபாய், மும்பை - 58,100 ரூபாய், டெல்லி - 58,250 ரூபாய், கொல்கத்தா - 58,100 ரூபாய், பெங்களூர் - 58,100 ரூபாய், ஹைதராபாத் - 58,100 ரூபாய், கேரளா - 58,100 ரூபாய், புனே - 58,100 ரூபாய், பரோடா - 58,150 ரூபாய், அகமதாபாத் - 58,150 ரூபாய், ஜெய்ப்பூர் - 58,250 ரூபாய், லக்னோ - 58,250 ரூபாய், கோயம்புத்தூர் - 58,700 ரூபாய், மதுரை - 58,700 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 64,040 ரூபாய், மும்பை - 63,380 ரூபாய், டெல்லி - 63,530 ரூபாய், கொல்கத்தா - 63,380 ரூபாய், பெங்களூர் - 63,380 ரூபாய், ஹைதராபாத் - 63,380 ரூபாய், கேரளா - 63,380 ரூபாய், புனே - 63,380 ரூபாய், பரோடா - 63,430 ரூபாய், அகமதாபாத் - 63,430 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,530 ரூபாய், லக்னோ - 63,530 ரூபாய், கோயம்புத்தூர் - 64,040 ரூபாய், மதுரை - 64,040 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 46960 ரூபாய், மும்பை - 46480 ரூபாய், டெல்லி - 46600 ரூபாய், கொல்கத்தா - 46480 ரூபாய், பெங்களூர் - 46480 ரூபாய், ஹைதராபாத் - 46480 ரூபாய், கேரளா - 46480 ரூபாய், புனே - 46480 ரூபாய், பரோடா - 46520 ரூபாய், அகமதாபாத் - 46520 ரூபாய், ஜெய்ப்பூர் - 46600 ரூபாய், லக்னோ - 46600 ரூபாய், கோயம்புத்தூர் - 46960 ரூபாய், மதுரை - 46960 ரூபாய்.

18 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 48,030 ரூபாய், மும்பை - 47,540 ரூபாய், டெல்லி - 47,660 ரூபாய், கொல்கத்தா - 47,540 ரூபாய், பெங்களூர் - 47,540 ரூபாய், ஹைதராபாத் - 47,540 ரூபாய், கேரளா - 47,540 ரூபாய், புனே - 47,540 ரூபாய், பரோடா - 47,580 ரூபாய், அகமதாபாத் - 47,580 ரூபாய், ஜெய்ப்பூர் - 47,660 ரூபாய், லக்னோ - 47,660 ரூபாய், கோயம்புத்தூர் - 48,030 ரூபாய், மதுரை - 48,030 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 25,170 ரூபாய், பெங்களூர் - 25,170 ரூபாய், புவனேஸ்வர் - 25,170 ரூபாய், சண்டிகர் - 25,170 ரூபாய், சென்னை - 25,170 ரூபாய், கோயம்புத்தூர் - 25,170 ரூபாய், டெல்லி - 25,170 ரூபாய், ஹைதராபாத் - 25,170 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,170 ரூபாய், கேரளா - 25,170 ரூபாய், கொல்கத்தா - 25,170 ரூபாய், லக்னோ - 25,170 ரூபாய், மதுரை - 25,170 ரூபாய்,

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 82200 ரூபாய், மும்பை - 79200 ரூபாய், டெல்லி - 79200 ரூபாய், கொல்கத்தா - 79200 ரூபாய், பெங்களூர் - 78000 ரூபாய், ஹைதராபாத் - 82200 ரூபாய், கேரளா - 82200 ரூபாய், புனே - 79200 ரூபாய், பரோடா - 79200 ரூபாய், அகமதாபாத் - 79200 ரூபாய், ஜெய்ப்பூர் - 79200 ரூபாய், லக்னோ - 79200 ரூபாய், கோயம்புத்தூர் - 82200 ரூபாய், மதுரை - 82200 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+