சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக இறங்குமுகத்தில் இருந்து மக்களுக்கு நம்பிக்கை கொடுத்த தங்கம் தற்போது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது.
ஆபரணத் தங்கம்: சென்னையில் நேற்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 9,355 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது, அதுவே இன்று ஒரு கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 9,390 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு நேற்றைய தினம் 74 , 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 280 ரூபாய் விலை உயர்ந்து 75 ,120 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கத்தை பொறுத்தவரை இன்றைய தினம் 93, 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .

ரூ.75,000ஐ கடந்தது: ஒரு சவரன் தங்கம் 75 ஆயிரம் ரூபாயை கடந்திருப்பது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 5 நாட்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம்:
ஆகஸ்ட் 23 - 74 ,520 ரூபாய்
ஆகஸ்ட் 24 - 74,520 ரூபாய்
ஆகஸ்ட் 25 - 74, 440 ரூபாய்
ஆகஸ்ட் 26 - 74,840 ரூபாய்
ஆகஸ்ட் 27 - 75,120 ரூபாய்
24 கேரட் தங்கம்: 24 கேரட் தங்கமும் கிராமுக்கு 38 ரூபாய் விலை உயர்ந்து 10,244 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் 304 ரூபாய் விலை உயர்ந்து 81,952 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கிராம் தங்கத்திலும் விலை மாற்றம் உள்ளது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது . ஒரு கிராம் 7,720 ரூபாய்க்கும் ஒரு சவரன் 62,160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஏன் விலை உயர்ந்தது?: ஆகஸ்ட் 1 முதல் தற்போது வரை பார்க்கும் போது தங்கத்தின் விலை கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று ஒரு கிராமுக்கு 9,470 ரூபாய் என உச்சம் கண்டது இதனை அடுத்து படிப்படியாக விலை குறைந்த தங்கம் மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பை அமல்படுத்தி இருப்பது, சர்வதேச நாடுகளின் பங்குச்சந்தைகள் வலுவிழந்து இருப்பதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி இருப்பதால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து அதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.
வெள்ளி: வெள்ளியை பொறுத்தவரை அதன் விலையில் இன்று எந்த ஒரு மாற்றமும் இல்லை. வெள்ளியை ஒரு கிராம் 130 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த மாதம் முதல் இந்தியாவில் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications