சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில் ஜுன் 7ஆம் தேதி அன்று விலை குறைந்து நகை பிரியர்களுக்கு சற்றே நிவாரணம் அளித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க அரசின் நடவடிக்கைகள், உள்நாட்டு தேவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாறுபடும். அந்த வகையில் ஜூன் 7ஆம் தேதி அன்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை குறைந்தது: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 8,980 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 71,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. எனவே ஜூன் 5ஆம் தேதி நிலவரப்படியே நேற்று தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு ரூ.1200 குறைவு: ஜூன் 5ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 9,130 ரூபாய்க்கும் ஒரு சவரன் 73,040 ரூபாய்க்கும் விற்பனையானது. ஜூன் 6ஆம் தேதியான வெள்ளிக்கிழமை அன்றும் தங்கம் இதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 7ஆம் தேதியான இன்று ஒரு கிராம் தங்கம் 150 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்துள்ளது.
வார இறுதி நாளில் நற்செய்தி: வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று தங்கம் விலை சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விலையில் மாற்றம் இருக்காது என்பதால் இந்த இரண்டு நாட்களும் மக்கள் தங்கம் வாங்க நகைக்கடைகளுக்கு படை எடுப்பார்கள். சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 163 ரூபாய் குறைந்து 9,797 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் விலை 1630 ரூபாய் சரிவடைந்து 97,970 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் சென்னையில் ஒரு கிராம் 125 ரூபாய் குறைந்து, 7385 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1000 ரூபாய் விலை குறைந்து 59,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை: அதே வேளையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 117 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய தினம் ஒரு கிராம் வெள்ளியின் விலை 118 ரூபாய் என இருந்தது. கடந்த 2ஆம் தேதி 111 ரூபாய் என இருந்த வெள்ளியின் விலை நான்கே நாட்களில் 118 ரூபாய் என உயர்ந்திருந்து தற்போது 1 ரூபாய் குறைந்துள்ளது.
More From GoodReturns

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications