மக்களே குட்நியூஸ்! இன்றும் தங்கம் விலை குறைந்தது!! ஒரு வாரத்தில் எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

சென்னை: சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகிறது. 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கிறது.

ஒரு வாரமாக இறங்குமுகம்: கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதியான சனிக்கிழமையில் இருந்து இந்த வார சனிக்கிழமை வரையிலான ஒரு வார காலத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவிலேயே தான் இருந்து வருகிறது. சாமானிய மக்களுக்கு இது சற்றே ஆறுதலை அளித்துள்ளது. சென்னையில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 9,445 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 9,275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து இருக்கிறது. ஒரு சவரனுக்கு என பார்த்தால் 1360 ரூபாய் விலை குறைவு கண்டிருக்கிறது.

மக்களே குட்நியூஸ்! இன்றும் தங்கம் விலை குறைந்தது!! ஒரு வாரத்தில் எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

எவ்வளவு விலை: கடந்த சனிக்கிழமை தொடங்கி திங்கள், செவ்வாய், புதன் ,வெள்ளி என அனைத்து நாட்களிலும் தங்கத்தின் விலை குறைந்து தான் வந்திருக்கிறது. சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 9275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் பொருத்தவரை 74 ,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் விலை: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 6 ரூபாய் விலை குறைந்து 10,118 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 80 , 944 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 18 கேரட் தங்கத்தை பொருத்தவரை அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லை ஒரு கிராம் 7670 ரூபாய்க்கும் ஒரு சவரன் 61,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை மேலும் குறையுமா?: வெள்ளி இன்று 10 காசுகள் விலை உயர்ந்திருக்கிறது ஒரு கிராம் 126.20 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1, 26,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை பொருத்தவரை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. உலகளாவிய பொருளாதார சூழல், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் ஆகியவை தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சர்வதேச புவிசார் அரசியல் பதட்டங்கள், வர்த்தக மோதல்கள் தற்போது சற்றே தணிந்திருக்கின்றன. எதிர்வரும் நாட்களிலும் இதே போக்கு நீடித்தால் தங்கத்தின் விலை இந்த அளவிலேயே நீடிக்கும். ஒரு வேளை டிரம்ப் ஏதேனும் அதிரடியான வரி அறிவிப்புகளை வெளியிட்டால் மீண்டும் தங்கம் விலை உயர்வை காணலாம்.

என்ன செய்யலாம்: தற்போதைக்கு வீட்டில் சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்க வேண்டும் என காத்திருந்தவர்கள் இந்த விலை குறைவை பயன்படுத்தி கொண்டு தங்கத்தை வாங்கி வைக்கலாம், முதலீடு செய்யும் யோசனையில் இருப்பவர்களும் தங்கம் விலை குறைவை பயன்படுத்தி கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+