சென்னை: ஆகஸ்ட் மாதம் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத வகையில் 10 நாட்களுக்கும் மேலாக விலை உயராமல் தொடர்ந்து குறைந்து வந்தது. தங்கத்தின் விலை இப்படி ஏறாமல் இறங்குமுகமாக இருந்தது சாமானிய மக்களுக்கு சற்றே நிம்மதியை தந்தது.
தங்கம் விலை: ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி இறங்குமுகமாகவே இருந்த தங்கம் கடந்த 21ஆம் தேதி உயர தொடங்கியது. 21ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 9,230 ரூபாய்க்கும் ஒரு சவரன் 73 ,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் விலை குறைந்து 9,215 ரூபாய்க்கும் ஒரு சவரன் 73 , 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று விலை என்ன: இந்த சூழலில் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஆன இன்று சென்னையில் ஆபரண தங்கம் திடீரென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 9, 315 ரூபாய் என கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 800 ரூபாய் விலை உயர்ந்து 74 ,520 ரூபாய் என விற்கப்படுகிறது. மீண்டும் தங்கத்தின் விலை 74 ,000 ரூபாயை கடந்து இருக்கிறது. சனிக்கிழமை விலை உயர்ந்திருப்பதால் ஞாயிற்றுக்கிழமையும் இதே விலைக்கு தான் தங்கம் விற்பனை செய்யப்படும்.
24 கேரட் தங்கம் : அதேபோல 24 கேரட் தங்கமும் இன்றைய தினம் விலை உயர்வு கண்டிருக்கிறது. 24 கேரட் தங்கத்தை பொருத்தவரை நேற்று ஒரு கிராம் 10,053 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அது 10,162 ரூபாய் என ஒரு கிராம் 109 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரனை பொறுத்தவரை நேற்றைய தினம் 80, 424 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றைய தினம் 81,292 ரூபாய் என ஒரு சவரனுக்கு 872 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
வெள்ளி விலை: 18 கேரட் தங்கமும் கிராமுக்கு 85 ரூபாய் விலை உயர்வு கண்டு 7,705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு சவரன் என பார்த்தால் 680 ரூபாய் விலை உயர்ந்து 61,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்திற்கு நிகராக வெள்ளியின் விலையும் உயர்வு கண்டிருக்கிறது . நேற்றை விட இன்றைய தினம் வெள்ளி ஒரு கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,000 ரூபாய் விலை உயர்ந்து 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை மேலும் உயருமா?: அமெரிக்க அரசின் மத்திய வங்கி தலைவர் ஜெரோம் போவெல் கூடிய விரைவில் வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுக்க போவதாக அறிவித்துள்ளார். இது சர்வதேச அளவில் தங்கத்தின் விலையை உயர்த்தி இருக்கிறது, இந்தியாவிலும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகி இருக்கிறது. அமெரிக்க டாலர் வலுவிழந்து வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. எதிர்வரும் நாட்களிலும் தங்கம், விலை ஏறுமுகத்தில் இருப்பதற்கான வாய்ப்பே இருப்பதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?



Click it and Unblock the Notifications