தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. நவம்பர் 22-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி கிராமுக்கு 87 ரூபாய் அதிகரித்திருக்கிறது. கடந்த 17-ஆம் தேதி அன்று மிகவும் குறைந்து காணப்பட்ட தங்கம் விலை மீண்டும் படிப்படியாக ஏறத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,225 ரூபாயாகவும் அதேபோல 24 கேரட் தங்கம் ரூ.7,882 ஆகவும் உள்ளது.
கோவை மதுரை மற்றும் சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து 7,225-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.640 அதிகரித்து ரூ.57,800-க்கும் 10 கிராம் 22 கேரட் தங்கம் 800 அதிகரித்து ரூ.72,250-க்கும் விற்பனையாகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் 87 ரூபாய் அதிகரித்து ரூ.7,882-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் 696 ரூபாய் அதிகரித்து ரூ.63,056-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் 870 அதிகரித்து ரூ.78,820-க்கும் விற்பனையாகிறது.
சமீபகாலமாகத்தான் 22 கேரட் தங்கம் 7,000-த்தையும் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.6,500 முதல் ரூ.7000-த்திற்குள் இருந்த விலை வரம்பு தற்போது அதிகரித்து இருக்கிறது. 22 கேரட் தங்கத்தை வைத்து நகைகள் செய்யப்படும். இது வெறும் தங்கத்திற்கான விலை மட்டுமே. இதோடு மேக்கிங் சார்ஜஸ் மற்றும் பிற கட்டணங்களையும் சேர்த்துதான் நகைகளாக வாங்க முடியும். 24 கேரட் தங்கம் வாங்க வேண்டும் என்றால் அவற்றை கோல்ட் காயின்களாகவும், கோல்ட் பார்களாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
இந்தியாவில் தங்கம் விலையை பாதிக்கக்கூடிய பல்வேறு காரணிகள் உள்ளது. மத்திய மாநில அரசு வரிகள், போக்குவரத்து செலவு, டிமெண்ட், அமெரிக்க வட்டி விகித குறைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை மாறலாம். அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைத்தால் தங்கத்தை முதன்மை முதலீடாக கருதி முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். ஃபெடரல் ரிசர்வ்-வின் வட்டி விகிதத்தை அதிகரித்தால் மக்கள் பங்குகள், பத்திரங்கள் என அதிக வட்டியின் மூலம் பலனடையக்கூடும் இதனால் தங்கத்தின் மீதான ஈடுபாடு குறையலாம். இதன் போது தங்கம் விலை குறையும்.
இதே போல தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள் உள்ளன. தங்கம் விலை ஏறினாலும் சரி.. தங்கம் விலை இறங்கினாலும் சரி.. குறிப்பிட்ட மக்களுக்கு அது பலனளிக்கும். தங்கம் விலை ஏறுவது ஏற்கனவே தங்கம் வாங்கிய முதலீட்டாளர்களுக்கு நல்லது. தங்கம் விலை குறைவது புதிதாக தங்க நகை வாங்குபவர்களுக்கு நன்மை பயக்கும்.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் வெள்ளி விலை 101 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 1,01,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications