நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது கிடு கிடுவென உச்சம் தொட்டு வருகின்றது.
சிட்டிகுரூப் இன்க் படி, 2011ம் ஆண்டில் தங்கம் விலையானது உச்ச சாதனைகளை தொட்டிருந்த நிலையில், தற்போது தான் மீண்டும் தங்கம் விலையானது உச்சத்தினை தொட்டுள்ளது.
அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் தங்கம் எல்லா நேரத்திலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை அதிகரிக்கும்
மேலும் அடுத்த மூன்று முதல் ஐந்து மாதங்களில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2000 டாலரினை தொடலாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்கனவே உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், இன்னும் இது புதிய உச்சத்தினை தொடும் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
பாதுகாப்பு புகலிடம்
ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில், முதலீட்டாளர்களுக்கு தங்கமானது பாதுகாப்பு புகலிடமாக மாறியுள்ளதால் விலை புதிய உச்சம் தொட்டு வருகின்றது. இதற்கிடையில் தான் நடப்பு ஆண்டில் இது வரையில் தங்கம் விலையானது 19% அதிகரித்துள்ளது. இது ஒன்பது வருடங்களில் இல்லாத உச்சமாகும்.
தங்கம் விலை அதிகரிக்கும்
மேலும் எளிதான பணவியல் கொள்கைகள் மற்றும் பொருளாதாரங்களை உயர்த்துவதற்கான பிற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதேசமயம் உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இது சீரற்ற பொருளாதார வளர்ச்சியினையே சுட்டிக் காட்டுகிறது. இதனால் தங்கம் விலை அதிகரிக்கும் என்பதே நிபுணர்கள் கருத்தாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது சிட்டி குழுமாக உள்ளது.
பொருளாதார ஊக்குவிப்பு தொடர்பான பேச்சு வார்த்தை
ஐரோப்பிய அரசாங்கங்கள் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க, மிகப்பெரிய தொகுப்புகள் அடங்கிய பொருளாதார ஊக்குவிப்பு பேக்கேஜ்களை அறிவிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. அமெரிக்காவிலும் இன்று மிகப்பெரிய தூண்டுதல் தொடர்பான தொகுப்பினை வெள்ளை மாளிகையில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இனி தங்கம் விலை?
இதற்கிடையில் அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. இது கொரோனா வைரஸினால் நிலைகுலைந்து போயுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
எனினும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications