தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது..!!

இந்தியாவில் தங்கத்தின் விலை மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) சந்தையில் இன்று 10 கிராமுக்கு 1.43 சதவீதம் உயர்ந்து 95,980 ரூபாயாக உள்ள, அதேவேளை, வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 2.15 சதவீதம் உயர்ந்து 96,452 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்திய புல்லியன் சங்கத்தின் (IBA) காலை 8.20 மணி தரவுப்படி, 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.95,060 ஆகவும், 22 காரட் தங்கம் ரூ.87,138 ஆகவும், வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.94,490 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது. இது ரீடைல் சந்தையில் மாறுப்படும். தங்கம் விலை நேற்று மாலை அமெரிக்க வர்த்தக சந்தை துவங்கியதில் இருந்து உயர துவங்கியுள்ளது. இதற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளது.

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது..!!

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இது அமெரிக்க முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. இதேவேளையில் அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம், உள்நாட்டு தேவை அதிகரிப்பு, மற்றும் அமெரிக்க-சீன வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நிச்சயமின்மை ஆகியவை தங்க விலைகளை உயர்த்தியுள்ளன.

உலகளாவிய நிச்சயமின்மை மற்றும் தங்கத்தின் உயர்வு

அமெரிக்க - சீன வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து நிலவும் நிச்சயமின்மை, தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வின் மே 7, 2025 அன்று அறிவிக்கப்படவுள்ள நாணய கொள்கை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி இழுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22 அன்று, இந்தியாவில் தங்க விலை 10 கிராமுக்கு ரூ.1 லட்சத்தை எட்டியது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரி விதிப்புகள் குறித்த உலகளாவிய வர்த்தக பதற்றம் குறைந்ததால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சற்று சரிந்தன.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்திற்கு முன் எதிர்பார்ப்பு

அமெரிக்க பெடரல் ரிசர்வ் செவ்வாய்க்கிழமை தொடங்கும் இரு நாள் நாணயை கொள்கைக் கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கலாம் என்று கணிப்புகள் கூறினாலும், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெஸ்ஸென்ட், கடந்த வியாழக்கிழமை, பத்திரச் சந்தை குறித்து பேசுகையில் பென்ச்மார்க் வட்டி விகிதக் குறைப்பு இருக்கும் என்று கூறினார். இதனால் நேற்றைய அமெரிக்க வர்த்தக துவங்கியதும் தங்கம் விலை சர்வதேச ஸ்பாட் சந்தையிலும் சரி, இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையிலும் சரி தடாலடியாக உயர்ந்தது.

ஸ்காட் பெஸ்ஸென்ட் கூறுகையில், இரண்டு ஆண்டு அமெரிக்க அரசு பத்திரங்களின் வருமானம் பெடரல் ரிசர்வின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை விடக் குறைவாக உள்ளது. இதன் மூலம் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் கட்டாயம் பெடரல் ரிசர்வ்-க்கு உள்ளது என கூறினார்.

வட்டி விகிதங்கள் குறையும்போது, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கு தேவை அதிகரிக்கும். இதனாலேயே நேற்றைய வர்த்தகத்தில் இருந்து தங்கம் விலை தடாலடியாக உயர துவங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தை நிபுணர்களின் பார்வை

தங்கம் விலையின் தடாலடி உயர்வு குறித்து HDFC செக்யூரிட்டீஸின் பொருட்கள் மற்றும் நாணயத் தலைவர் அனுஜ் குப்தா கூறுகையில், "வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு தங்கத்தின் இன்றைய உயர்வுக்கு காரணம். இது தங்கத்தில் முதலீடு செய்தோர் லாபத்தைப் பதிவு செய்ய சரியான நேரம்," என்றார்.

LKP செக்யூரிட்டீஸின் ரிசர்ச் ஆய்வாளர் ஜதீன் திரிவேதி கூறுகையில், "அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பால், தங்க விலைகள் கடுமையாக உயர்ந்தன," என்று கூறினார். அவரது கருத்துப்படி, பெடரல் ரிசர்வ் மென்மையான (dovish) அறிவிப்பு அல்லது வட்டி விகிதக் குறைப்பு தங்கத்தை மேலும் உயர்த்தலாம் என கூறினார்.

2025-ல் தங்கத்தின் விலை மாற்றங்கள் (ஏற்றங்கள்)

2025-ல் இதுவரை, இந்தியாவில் தங்க விலைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 10 கிராமுக்கு ரூ.17,800 உயர்ந்து, 23.21% வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும், தங்கம் தனது உச்ச விலையான ரூ.99,358 அளவில் இருந்து குறைவாகவே உள்ளது.

இது மட்டும் அல்லாமல் 2001 முதல், தங்கம் ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானத்தை (CAGR) அளித்துள்ளது. அமெரிக்க டாலர் குறியீட்டின் பலவீனம் மற்றும் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு, தங்கத்தை முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு முக்கிய டிப்ஸ்

அமெரிக்க பெடரல் ரிசர்வின் முடிவு, தங்க விலைகளின் எதிர்காலப் போக்கை பெரிதும் பாதிக்கும். வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், தங்கத்தின் தேவை மேலும் உயரலாம். ஆனால், கொள்கைகள் மாறாமல் இருந்தால், விலைகளில் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+