5 வார உச்சத்தில் தங்கம் விலை.. இனியும் ஏற்றம் காணுமா.. குறையவே குறையாதா?

தங்கம் விலையானது இரண்டாவது வாரமாக மீண்டும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இது 5 வார உச்சத்தினை எட்டியுள்ளது. இது உள்நாட்டு சந்தையில் 1.40% ஏற்றத்தில் காணப்படுகிறது.

பிப்ரவரி கான்ட்ராக்டில் பியூச்சர் தங்கத்தின் விலையானது 10 கிராமுக்கு 53,393 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. இது முந்தைய வார முடிவு விலையான, 52,540 ரூபாயில் இருந்து, 853 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதே ஸ்பாட் கோல்டின் விலையானது 2.45% அதிகரித்து, 1797 டாலர்களாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இது முந்தைய வார முடிவு விலையானது 1754 டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலக்கு விலை

இலக்கு விலை

சந்தை நிபுணர்களின் கணிப்பின் படி, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு யூகங்களுக்கு மத்தியில், டாலரின் மதிப்பானது சற்றே அழுத்தத்தில் காணப்படுகிறது. இது வட்டி விகிதம் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையில் காணப்படுகிறது. இதற்கிடையில் எப்படியிருப்பினும் தங்கம் விலையானது 54,500 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி அதிகரிப்பு இருக்கலாம்

வட்டி அதிகரிப்பு இருக்கலாம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1840 டாலர்கள் வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது மீண்டும் வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடு அதிகரிக்கலாம்

முதலீடு அதிகரிக்கலாம்

டாலரின் மதிப்பானது 3 அரை மாத சரிவினை தொட்ட நிலையில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுக்கலாம்.

இதற்கிடையில் நிபுணர்கள் வரவிருக்கும் வாரத்தில் வெளியாகவிருக்கும் தரவுகள் காரணமாக, தங்கத்தின் விலையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உற்பத்தி சரிவு

உற்பத்தி சரிவு

அமெரிக்காவின் தொழிற்துறை உற்பத்தியும் மிக மோசமான சரிவினை கடந்த அக்டோபர் மாதம் கண்டது. இதே நவம்பர் மாதத்தில் இரண்டரை வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டது. எனினும் வேலை வாய்ப்பு குறித்தானது தரவானது பெரியளவில் மாற்றமின்றி, சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனினும் வேலையின்மை விகிதம் 3.7% ஆக மாற்றமின்றி இருந்தது.

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவு

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவு

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி நீண்டகால நோக்கில் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த, வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் தங்கத்தின் தேவையானது அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் 2022 மாதத்தில் 28% அதிகரித்து, 1181 டன்னாக அதிகரித்துள்ளது.

 

தங்கம் வாங்கியவர்கள்

தங்கம் வாங்கியவர்கள்

நடப்பு ஆண்டில் துருக்கி, உஸ்பெகிஸ்தான், இந்தியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகளானது தங்கத்தினை வாங்கி குவித்து வருகின்றன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 2022ம் ஆண்டில் 10% சரிவினைக் கண்டுள்ளது. இது மீண்டும் வட்டி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி சிறந்த ஆக இருக்கும் தங்கத்தினை வாங்கியுள்ளது.

 

தேவை அதிகம்

தேவை அதிகம்

தொடர்ந்து இந்தியாவில் ஜூவல்லரி விற்பனையாளர்கள் மத்தியில் தங்கத்தின் தேவையானது, அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் மீடியம் டெர்மில் தங்கத்தின் சப்போர்ட் விலையானது 52,000 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் விலையானது 56,000 ரூபாயாகவும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 62,000 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 68,000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர்.

ஒபெக் கூட்டம் + ஃபெடரல் ரிசர்வ் கூட்டம்

ஒபெக் கூட்டம் + ஃபெடரல் ரிசர்வ் கூட்டம்

இதற்கிடையில் வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம், ஒபெக் கூட்டம் என பலவும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளன. ஒபெக் கூட்டத்தில் மேற்கொண்டு உற்பத்தி குறைப்பு என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு விலை அதிகரிப்பினை தூண்டலாம். வரவிருக்கும் நாட்களில் தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் காண வழிவகுக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+