சற்றே குறைந்த தங்கம் விலை.. இனியும் சரிவு தொடருமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிய நிலையில், இன்று சர்வதேச சந்தையில் சற்றே குறைந்து காணப்படுகின்றது.

தங்கத்தின் விலையானது இன்று காலை ஆசிய சந்தையில் சற்றே சரிவில் காணப்பட்டது.இது கடந்த அமர்வில் 1% ஏற்றத்தினை கண்டிருந்த நிலையில், இது மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது.

இது கடந்த அமர்வில் அமெரிக்க டாலர் மற்றும் பத்திர சந்தையானது சரிவினைக் கண்ட நிலையில், இது மேற்கொண்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு சற்றே குறைந்தாலும் பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 13 - 14 அன்று நடக்கவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டியில்லா முதலீடு

வட்டியில்லா முதலீடு

அதிகளவிலான வட்டி விகிதம் என்பது வடியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். எனினும் பணவீக்கத்தினை குறைக்கும் ஒரு நடவடிக்கை என்பதால், பணவீக்கமும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.

சீனாவின் தேவை அதிகரிப்பு

சீனாவின் தேவை அதிகரிப்பு

கடந்த சில மாதங்களாக சீனாவில் தங்கத்தின் தேவையானது சரிவினைக் கண்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் தேவையானது 63.67 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 62.64 மில்லியனாக இருந்தது. இதற்கிடையில் சீனாவின் உற்பத்தி விகிதமானது தொடர்ந்து சரிவினைக் கண்டிருந்த நிலையில், ஏற்றுமதியும் சரிவினைக் கண்டுள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே சரிவினைக் கண்டு வந்த நிலையில், கடந்த அமர்வில் சற்றே அதிகரித்து காணப்பட்டது. இன்றும் சற்றே அதிகரித்து காணப்படுகின்றது.இது தங்கம் விலையில் இந்திய சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.45 டாலர்கள் குறைந்து, 1794.65 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் புராபிட் புக்கிங் காரணமாக குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் என்பது அதிகம் உள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. வெள்ளியின் விலையானது 0.63% குறைந்து, 22.777 டாலராக காணப்படுகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் புராபிட் புக்கிங் காரணமாக குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிக அதிகம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 53,962 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

வெள்ளி விலையும் கிலோவுக்கு 103 ரூபாய் குறைந்து, 66,164 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் இன்று கீழாகவே காணப்படுகிறது. இது இன்ட்ராடேவில் அழுத்தத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று கிராமுக்கு, 7 ரூபாய் அதிகரித்து, 5023 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 40,184 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 5479 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 54,790 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 71.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 71,300 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+