தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வந்த நிலையில், கடந்த அமர்வில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் இன்று அதனை தொடர்ந்து தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.
தங்கம் விலையானது இன்றும் சரிவினை கண்டு வரும் நிலையில், இது 1820 டாலர்களுக்கு அருகில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை, சீனா தனது கட்டுபாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், இது மேற்கோண்டு தங்கத்தின் விலையில் நீண்டகால நோக்கில் ஊக்குவிக்கலாம்.
தங்கம் விலை சரிவு ஏன்?
தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1825 டாலர்களுக்கு செல்லலாம் என்ற நிலையில், இது அடுத்ததாக 1820 டாலர்களையும் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து டாலரின் மதிப்பானது 104.33 என்ற லெவலில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் விலையில் மேற்கோண்டு சரிய காரணமாக அமைந்துள்ளது.
தங்கம் விலையில் அழுத்தம்
டாலரின் மதிப்பு ஏற்றம் கண்டு வரும் நிலையில், பத்திர சந்தையும் கிட்டதட்ட 3.92% சரிவில் காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
விலை குறையலாம்
அமெரிக்காவின் 4வது காலாண்டு பொருளாதாரம் மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்காவின் ஜிடிபி என்பது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்துள்ளது.
டெக்னிக்கலாகவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கொண்டு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6 டாலர்கள் குறைந்து,1835.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.36% குறைந்து, 21.605 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 199 ரூபாய் குறைந்து, 55,884 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 213 ரூபாய் குறைந்து, 65,230 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிக விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 5245 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 41,960 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து, 5722 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 330 ரூபாய் குறைந்து, 57,220 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று சரிவில் காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 50 பைசா குறைந்து, 71.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 71,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications