5 வார சரிவில் தங்கம் விலை.. இந்த வாரமும் சர்ப்ரைஸ் கிடைக்குமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க பாருங்க!

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விலையில் தாக்கம் இருந்தது.

அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தான தரவானது வெளியான நிலையில், இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையானது கடந்த சில வாரங்களுக்கு முன்பு 10 கிராமுக்கு 58,847 ரூபாயாக உச்சம் தொட்டது. எனினும் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவிலேயே முடிவடைந்துள்ளது.

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

இது 10 கிராமுக்கு 56,255 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் 525 ரூபாய் சரிந்து, 56,780 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. இதே டாலரில் அவுன்ஸூக்கு 1841 டாலராகவும் முடிவடைந்துள்ளது.

கமாடிட்டி நிபுணர்கள் அமெரிக்கா வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.

 டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பு வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தொடர்ந்து தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. கடந்த வாரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பானது 103 என்ற லெவலில் இருந்து 104 என்ற லெவலை எட்டியது. ஆக வரும் வாரத்தில் டாலரின் மதிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அதுவும் தங்கம் விலை மீண்டும் ஏற்றம் காண வழிவகுக்கலாம்.

வாங்கலாம்

வாங்கலாம்

நிபுணர்கள் தங்கத்தினை வாங்கலாம் என கணித்துள்ள நிலையில், இது 55,500 ரூபாய் என்ற லெவலில் இருந்து, 10 கிராமுக்கு 57,200 ரூபாயினை எட்டலாம் என மதிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து தங்கம் விலை மீண்டும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பொருளாதாரம் குறித்தான தரவானாது சந்தையில், தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பல்வேறு தலைவலிகள்

பல்வேறு தலைவலிகள்

தொடர்ந்து பொருளாதாரம் பல்வேறு தலைவலிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறித்தான தரவும் 3% ஆக அதிகரித்துள்ளது. இது 1.8% ஆக எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து பணவீக்கமும் சற்றே உச்சத்தில் இருந்து வருகின்றது. ஆக இனி வரவிருக்கும் மத்திய வங்கிகளின் கூட்டத்தில் இதுவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

 பத்திர சந்தையும் ஏற்றம்

பத்திர சந்தையும் ஏற்றம்

கடந்த ஆண்டில் இருந்தே வட்டி விகிதமானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் வட்டி விகிதம் 5.3% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் அமெரிக்க பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

முக்கிய எதிர்பார்ப்புகள்

முக்கிய எதிர்பார்ப்புகள்

வரவிருக்கும் வாரத்தில் அமெரிக்காவின் ஜிடிபி குறித்தான தரவானது முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கிடையில் டாலர் மதிப்பும் ஓவர் பாட் லெவலில் இருப்பதால், வரும் வாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வரும் வாரத்தில் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக இனியும் ஷார்ட் பொசிசினை எடுப்பதை தவிர்க்கலாம். குறையும் போது வாங்கி வைக்கலாம். ஆக தங்கம் விலையானது 55,500 ரூபாயாகவும், அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 54,800 ரூபாயாகவும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்தடுத்து 56,800 ரூபாய் மற்றும் 57,100 ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 டாலரில் என்ன நிலவரம்?

டாலரில் என்ன நிலவரம்?

இதில் டாலரில் முக்கிய சப்போர்ட் ஆக 1830 டாலராகவும், அடுத்த முக்கிய சப்போர்ட் ஆக 1800 டாலராகவும், இதே ஏற்றம் கண்டால் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1890 டாலராகவும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+