தங்கம் விலை 2021-ல் $2000 தொடலாமாம்.. அப்படின்னா இந்தியாவில் எவ்வளவு அதிகரிக்கும்.. !

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர் என்று தான் கூற வேண்டும். இதன் மத்தியில் முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர்.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவும், மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவுமே இந்த கொடிய நோயின் தாக்கத்திற்கு விதிவிலக்கல்ல. ஏனெனில் அவர்களையும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு வருகிறது.

எனினும் அவர்கள் மக்களுக்கு மேற்கொண்டு பரவாமல் தடுக்க பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் பொருளாதாரத்தையும் சரிவிலிருந்து தடுக்கவும் பலவேறு வகையான துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு

இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு

அமெரிக்க சீனா போன்ற நாடுகளில் தொழில் சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூடல் என்பது அவர்களுக்கு பாதிப்பினை கொடுத்தாலும், இந்தியா போன்ற வளரந்து வரும் நாடுகளுக்கு இது மிகப் பெரிய பாதிப்பாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சீனாவினைப் போல இங்குள்ள தொழிலகங்களும், நிறுவனங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகள் மாறி மாறி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். எனினும் இது பொருளாதார ரீதியாக ஏற்படுத்தும் தாக்கத்தினை எப்படி இந்தியா சமாளிக்க போகிறது என்று தான் தெரியவில்லை.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

இதனால் இது மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி தங்கம் விலையானது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது எனலாம். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் உலகின் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் பார்வையும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது எனலாம். இதனால் சில பொருளாதார நிபுணர்கள் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலர்கள் வரை செல்லக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அதிகரித்து வரும் தாக்கம்

அதிகரித்து வரும் தாக்கம்

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத உச்சத்தினை தொட்ட தங்கத்தின் விலையானது, இனியும் ஏற்றம் காணும். மீண்டும் புதிய உச்சம் காணும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் உலகம் முழுவதிலும் தற்போது 3,81,529 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கையானது 16,554 பேராக உயர்ந்துள்ளது. இந்த மேற்கொண்டு அதிகரிக்கும் நிலையில் அது நிச்சயம் தங்கம் விலையில் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் எவ்வளவு பேர் பாதிப்பு

இந்தியாவில் எவ்வளவு பேர் பாதிப்பு

இதே இந்தியாவில் 492 பேர் இந்த வைரஸினால் தாக்கம் அடைந்துள்ள நிலையில் 9 பேர் இந்த தாக்கத்திற்கு பலியாகியுள்ளனர். உலகமெங்கிலும் பரவி வரும் இந்த வைரஸினால் இன்னும் பல ஆயிரம் பேர் இறக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் தற்போது இந்த தொற்று நோயின் மையமாக கருதப்படும் ஐரோப்பிய நாடுகளில் பலி எண்ணிக்கையானது, சீனாவினை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டு நெருக்கடி

2008ம் ஆண்டு நெருக்கடி

இந்த நிலையில் ப்ளும்பெர்க்கில் வெளியான செய்தி ஒன்றில், 2008ம் ஆண்டில் நிலவிய சர்வதேச நிதி நெருக்கடியின் மத்தியில், தங்கம் விலை எப்படி இருந்ததோ, அப்படி தற்போது உள்ளதாகவும், மேலும் 2011ல் அடைந்த வரலாற்று உச்சத்தினை தற்போது தங்கம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறந்த ஹெட்ஜிங்க்

சிறந்த ஹெட்ஜிங்க்

அமெரிக்காவின் மத்திய வங்கி பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் பொருட்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் வீழ்ச்சியை தடுக்க முடியும் எனவும் அமெரிக்கா நம்புகிறது. எனினும் பொருளாதாரம் மென்மையாக்கப்படும்போது இது சிறந்த ஹெட்ஜிங் ஆக பயன்படுத்தப்படுகிறது. ஆக தங்கம் விலை இன்னும் கூடலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வளவு அதிகரிக்குமா?

இவ்வளவு அதிகரிக்குமா?

இந்த நிலையில் 2021ம் ஆண்டில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 2000 டாலருக்கு மேல் கூட தொடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதையும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் தற்போது தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 25.70 டாலர்கள் அதிகரித்து, 1,592.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் விலை

தொடர்ந்து நான்கு தினங்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது, எம்சிஎக்ஸ் சந்தையில் கடந்த மூன்று தினங்களாகவே சற்று ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று தற்போது 163 ரூபாய் வீழ்ச்சி கண்டு 41,000 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் மேலும் ஏற்றம் காணக் கூடிய நிலையில் தான் கேண்டில்கள் உருவாகியுள்ளன. ஆக விரைவில் இதுவும் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

பொதுவாக தங்கம் விலையினை போலவே வெள்ளியின் விலையின் சற்று அதிகரித்து தான் காணப்படும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக வெள்ளியின் விலை 3.55% அதிகரித்துள்ளது. இதே தங்கம் விலையானது 1 சதவிகிதத்துக்கு சற்று அதிகமாக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெள்ளியின் விலையானது 0.491 டாலர் அதிகரித்து 13.750 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

தங்கம் விலை சற்று வீழ்ச்சி கண்டிருந்தாலும், வெள்ளி விலையானது 1548 ரூபாய் அதிகரித்து 39,460 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வழக்கமாக தங்கம் விலை அதிகரித்து இருந்தாலும் வெள்ளியின் விலையானது வீழ்ச்சி கண்டிருக்கும் அல்லது அந்தளவுக்கு ஏற்றம் இருக்காது. ஆனால் இன்று தங்கம் விலையானது சிறிது வீழ்ச்சி கண்டிருந்தாலும், வெள்ளியின் விலை பறந்து கொண்டிருக்கிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு பெரிய அளவில் மாற்றம் ஏதும் இன்றி 39.88 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 39880 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதுவரை நேற்றைய விலையிலிருந்து எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

இதே ஆபரணத் தங்கத்தின் விலையும் பெரிய அளவில் மாற்றம் இன்றி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 3,971 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 31,768 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்க, விலையானது தற்போது 1593 டாலர்களாக இருக்கும் நிலையிலேயே, இங்கு தங்கம் விலை கிட்டதட்ட 32,000 நெருங்கிய நிலையில், இது 1800 டாலர், அல்லது 2000 தொடும்போது சவரனுக்கு எங்கே செல்லுமோ..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+