ஜாக்பாட் தான்.. தங்கம் விலை இன்று எப்படி குறைந்திருக்கு தெரியுமா.. தீபாவளி சமயத்தில் செம..!

டெல்லி: தங்கம் (Gold) விலையானது சர்வதேச சந்தையில் வலுவான டாலரின் மதிப்பு, பத்திர சந்தை ஏற்றத்திற்கு மத்தியில் அழுத்தத்தில் காணப்படுகின்றது.

இது வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாமோ என்ற எதிர்பார்ப்பில் அழுத்தத்தில் காணப்படுகிறது.

இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கோண்டு அழுத்தம் காணலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இதன் காரணமாக விழாக்கால பருவத்தில் ஆபரண தங்கம் விலையும் குறைய வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்க ஆர்வலர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

 வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலையில், வட்டி இல்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் அமையலாம். எனினும் வட்டி அதிகரிப்பால் பொருளாதார வளர்ச்சி சரிவடையலாம்.

சரியான வாய்ப்பா?

சரியான வாய்ப்பா?

சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ள நிலையில், ரெசசசன் இருந்து வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலை பெரியளவில் சரியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படியிருப்பினும் தீபாவளி வரையில் இந்தியாவில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1633.65 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. எனினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது சற்று அதிகரித்து, 18.365 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 50,194 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையில் தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 37 ரூபாய் அதிகரித்து, 56,069 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 4685 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 37,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, 5111 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 128 ரூபாய் குறைந்து, 40,888 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 51,110 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 50 பைசா குறைந்து, 61 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 610 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 61,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.46,850

மும்பை - ரூ.46,350

டெல்லி - ரூ.46,500

பெங்களூர் - ரூ.46,400

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,850

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+