தங்கம் விலையானது பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் கடந்த சில வாரங்களாகவே ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலாகவே வர்த்தகமாகி வருகின்றது.
தொடர்ந்து டாலரின் மதிப்பானது கடந்த சில வாரங்களாகவே அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது உச்சத்தில் காணப்படுகின்றது.
கடந்த 6 வாரங்களாகவே தங்கம் விலையானது தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் பிப்ரவரி கான்ட்ராக்டில் தங்கத்தின் விலையானது 54,295 ரூபாயாக முடிவடைந்தது.
விலை குறையுமா?
தொடர்ந்து உச்சத்தையே கண்டு வரும் நிலையில், இது குறைந்த விலையில் வாங்க வாய்ப்பே கிடைக்காதா? வரும் நாட்களில் குறைந்தால் அதனை குறைந்த விலையில் வாங்கலாமே? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதற்கிடையில் வரும் வாரத்தில் புராபிட் புக்கிங் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க வாய்ப்பாக அமையலாம்.
ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்
ஆக குறையும்போது வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அடுத்த சில அமர்வுகளில் தங்கம் விலையானது சற்றே குறையலாம். அது தங்க முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாகவும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் சில அமர்வுகளில் தங்கத்தில் நிச்சயம் ஏற்ற இறக்கம் என்பது சற்று அதிகமாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
வரவிருக்கும் நாட்களில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 55,500 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே சப்போர்ட் லெவலாக 53,500 - 53,200 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது. ஆக முதலீட்டாளர்களின் கவனம் முழுக்க அதன் பக்கம் திரும்பியுள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பணவீக்கம் முக்கிய பங்கு
இதற்கிடையில் வரவிருக்கும் வாரத்தில் வெளியாகவிருக்கும் பணவீக்கம் குறித்தான தரவு உள்ளிட்ட பல முக்கிய தரவுகள் வெளியாகவுள்ளன. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் வட்டி குறைப்பு என்பது மெதுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பணவீக்க தரவு என்பது தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
கொரோனா கட்டுப்பாடுகள்
கொரோனா கட்டுப்பாடுகள் என்பது தொடர்ந்து சந்தையில் தங்கத்தின் தேவையினை பிரதிபலிக்கலாம். இது தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். சீனாவில் தற்போது கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
நிபுணர்களின் கணிப்பு
இது குறித்து ரிலீகேர் புரோக்கிங் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணலாம், இது 54,800 ரூபாய் மற்றும் 54,900 ரூபாயினை எட்டலாம் என்றும் கணித்துள்ளது. ஒருவேளை தங்கம் விலையானது குறைந்தால் 53,200 ரூபாய் மற்றும் 53,500 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே டாலரில் தங்கம் விலையானது 1824 டாலர்களை எட்டலாம். இதே சரிவில் 1780 - 1790 டாலர்கள் வரையில் தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பொறுத்திருந்து வாங்கலாம்?
தங்கம் விலை குறைந்தாலும் அது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் இது எந்த அளவுக்கு குறையலாம் என்பதை நிபுணர்கள் பொறுத்திருந்து பார்த்து வாங்கலாம்.
More From GoodReturns

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications