தங்கம் விலை திடீரென சரிய என்ன காரணம்..? இப்போது வாங்கலாமா..? எக்ஸ்பர்ட் சொல்வது என்ன..?

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை வர்த்தகத்தில் கடுமையாக சரிந்தது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் நம்பிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு ஆகியவை முதலீட்டாளர்களை பாதுகாப்பு சொத்து முதலீட்டில் இருந்து விலகி பங்குச் சந்தை போன்ற ஆபத்து மிக்க முதலீடு செய்ய தயாராகியிருக்கும் காரணத்தால் இந்த மாற்றம் நடந்துள்ளது.

MCX தங்க விலை முந்தைய வர்த்தக நாள் முடிவு விலையான ரூ.96,518-லிருந்து ரூ.1018 குறைந்து ரூ.95,500-ல் தொடங்கியது. காலை 9:05 மணியளவில், ரூ.2,253 (2.33%) குறைந்து ரூ.94,265 ஆக வர்த்தகமானது. 11.30 மணியளவில் 93,965 ரூபாயாகவும் குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை ரூ.578 குறைந்து ரூ.96,151 ஆக வர்த்தகமானது.

தங்கம் விலை திடீரென சரிய என்ன காரணம்..? இப்போது வாங்கலாமா..? எக்ஸ்பர்ட் சொல்வது என்ன..?

சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்க விலை 1.4% குறைந்து ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3,277.68 டாலராகவும், அமெரிக்க சந்தையில் தங்கத்தின் பியூச்சர்ஸ் விலை 1.9% குறைந்து $3,281.40 ஆகவும் இருந்தது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1650 ரூபாய் குறைந்து 88,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1800 ரூபாய் குறைந்து 96,880 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 1320 ரூபாய் குறைந்து 71,040 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 2000 ரூபாய் குறைந்து 1,09,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 220 ரூபாய் குறைந்து 27,340 ரூபாயாக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முடிந்த அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகள் சாதகமான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள், சீனா உடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இரு நாடுகள் மத்தியிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என கூறினர், அதேவேளை சீன அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் மத்தியில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக தெரிவித்தனர், என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

இதன் மூலம் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் பதற்றம் குறைந்து வர்த்தக சந்தை மீண்டு வரும் என்ற நம்பிக்கை முதலீட்டு சந்தையில் எட்டப்பட்டு உள்ளது. இதனால் உலகம் முழுவதும் தங்கம் மீது செய்திருந்த முதலீட்டை பங்குச்சந்தைகளில் ரிஸ்க் எடுத்து முதலீடுகளை செய்ய துவங்கியுள்ளனர். இதனால் தங்க விலை சரிந்தது.

இதேவேளையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்த போர் நிறுத்தம், முதலீட்டாளர்களிடையே பதற்றத்தைக் குறைத்தது. இதுவும் இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டை அதிகரிக்க முக்கியமான காரணமாக இருந்து.

கடந்த புதன்கிழமை, காஷ்மீரில் 26 பேரைக் கொன்ற தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை இந்திய இராணுவம் ஹாட்லைன் மூலம் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தி, இந்த முடிவை மீறினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தது.

சர்வதேச தங்க முதலீட்டாளர்கள் தற்போது காத்திருப்பது அனைத்தும் செவ்வாய்க்கிழமை வெளியாகவிருக்கும் அமெரிக்க நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தரவுக்காக தான். இது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை முடிவுகளுக்கு பின்பு இந்த பணவீக்க அளவுகள் வெளியாகும் காரணத்தால் அமெரிக்க பணவீக்கத்தில் புதிய பாதையை உருவாகலாம், இதன் மூலம் தங்கம் விலையை மேலும் பாதிக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் மூத்த ஆய்வாளர் ஜிகர் திரிவேதி கூறுகையில், குறுகிய காலத்தில் தங்க விலை மேலும் சரியலாம். வலுவான அமெரிக்க டாலர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் குறைந்து வருவது முதலீட்டாளர்களின் பாதுகாப்பு சொத்துகளின் தேவையை குறைத்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+