தங்கம் விலைக்கு வேட்டு வைத்த அமெரிக்கா.. நாளை தரையை தட்டுவது உறுதி.. மக்களே உஷார்..!

அமெரிக்க மத்திய வங்கியின் பணவீக்க இலக்கான 2 சதவீத அளவில் இருந்து கிட்டத்தட்ட டபுள் மடங்கு உயர்ந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள அக்டோபர் மாத பணவீக்க தரவுகள் படி அந்நாட்டின் ரீடைல் பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 3.7 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.

அமெரிக்க ரீடைல் பணவீக்க அளவுகளை வைத்து தான் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த முடிவுகளை எடுக்க உள்ளது. ஏற்கனவே கூறியது போல் வட்டி விகித உயர்வுக்கும், பத்திர சந்தை முதலீட்டும், டாலர் மதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் காரணத்தால் இந்த மூன்றின் தாக்கம் தங்கம் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தங்கம் விலைக்கு வேட்டு வைத்த அமெரிக்கா.. நாளை தரையை தட்டுவது உறுதி.. மக்களே உஷார்..!

அமெரிக்காவில் அக்டோபர் மாத பணவீக்கம் 3.8 சதவீதம் வரையில் சரிந்திருக்கும் காரணத்தால் பெடரல் ரிசர்வ் டிசம்பர் 8-9 தேதிகளில் நடைபெறும் நாணய கொள்கை கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25% வரையில் உயர்த்த 97.8% வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக தற்போது சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை கிட்டத்தட்ட 3 சதவீதம் குறைந்து 3,427.01 டாலர் வரையில் குறைந்துள்ளது. Comex சந்தையில் தங்கம் விலை 3.03 சதவீதம் வரையில் சரிந்து 3,454 டாலர் வரையில் குறைந்துள்ளது.

இதனால் நாளை இந்திய சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது தங்கம் விலை பெரியளவில் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதைவிடவும் பயமுறுத்தும் விஷயம் என்னவென்றால் பெடரல் ரிசர்வ்-ன் டிசம்பர் மாத கூட்டத்தில், அமெரிக்காவில் பணவீக்கம் குறைக்க முடியாத நிலையில் இருப்பதால் 2027ஆம் ஆண்டிலும் வட்டி விகிதம் உயர்த்த வேண்டி இருக்கும். இதனால் பணவீக்கத்தை மீண்டும் 2 சதவீதத்திற்குக் கீழ் கொண்டுவர வட்டி விகிதம் எவ்வளவு உயர்த்தப்பட வேண்டும் என்பது குறித்த முடிவுகளை இக்கூட்டத்தில் எடுக்கப்படும்.

அமெரிக்காவில் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வுகள் அல்லாத Core PCE பணவீக்கம் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் மாதம் 3.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் CPI உணவு பணவீக்கம் 0.5 சதவீதமும், CPI எனர்ஜி பணவீக்கம் 0.7 சதவீதமும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அந்நாட்டின் பொருளாதாரம் வருடாந்திர அடிப்படையில் 4.3 சதவீதம் அளவில் 3ஆம் காலாண்டில் வளர்ச்சி அடைந்துள்ளது, இது முந்தைய கணிப்பை காட்டிலும் அதிகம்.

பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது பொருளாதாரமும், மக்கள் செலவு செய்யும் அளவும், மக்கள் கைக்குக் கிடைக்கும் வருமானமும் அதிகமாக இருக்கும் காரணத்தால் பெடரல் ரிசர்வ் கடுமையான நாணய கொள்கையை எளிதாகச் செயல்படுத்த முடியும்.

இதனால் டிசம்பர் கூட்டத்தில் வட்டி விகிதம் 0.25 சதவீதத்தைத் தாண்டி 0.50 சதவீதம் உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+