பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்றைய நாளில் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளன. காலை நேரத்தில் குறைந்த நிலையில் இருந்த தங்கம், மாலை நேரத்தில் மீண்டும் உயர்ந்துள்ளது மொத்த சரிவையும் விழுங்கிவிட்டது. இதனால் சந்தையில் ஒரே நாளில் பல்வேறு நிலைகள் உருவாகியுள்ளன.

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

காலை நிலவரம்: சரிவில் தொடங்கிய தங்கம்
காலை 9:46 மணியளவில், ஒரு கிராம் தங்கம் ரூ.12,950 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.235 ஆகவும் இருந்தது. இந்த நிலைமையே நாள் தொடக்கத்தில் சந்தையின் அடிப்படை நிலையாக இருந்தது.

Also Read

மதியம்: கூடுதல் சரிவு
மதியம் 3:43 மணியளவில் தங்கம் மேலும் சரிவை சந்தித்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,670 ஆக குறைந்தது. அதே நேரத்தில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.235 என்ற அளவிலேயே தொடர்ந்தது. இந்த கட்டத்தில் தங்கம் விலையில் கூடுதல் அழுத்தம் இருந்தது தெளிவாக தெரிகிறது.

மாலை: திடீர் மீட்சி
மாலை 6:38 மணியளவில் சந்தை திசை மாறியது. தங்கம் திடீரென உயர்ந்து ரூ.13,340 ஆக உயர்ந்தது. இதேபோல், வெள்ளி விலையும் ரூ.235 இலிருந்து ரூ.250 ஆக உயர்ந்து விற்பனையாகியது. இது முதலீட்டாளர்கள் மீண்டும் வாங்கும் மனநிலைக்கு திரும்பியதைக் காட்டுகிறது.

Recommended For You

ரோலர் கோஸ்டர் சந்தை
ஒரே நாளில் தங்கம் ரூ.12,670 என்ற குறைந்த நிலையைத் தொட்டு, பின்னர் ரூ.13,340 வரை உயர்ந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலை காலை வர்த்தகத்தில் எவ்விதமான மாற்றத்தையும் எதிர்கொள்ளாத நிலையில் மாலை நேரத்தில் உயர்வை பதிவு செய்துள்ளது.

காலை வர்த்தகத்தில் டிரம்ப் ஈரானுக்கு கொடுத்த 48 மணிநேர கெடு முடிவடையும் காரணத்தால் தங்கம் விலை இந்திய சந்தை முதல் அமெரிக்க சந்தை வரையில் பெரும் சரிவை பதிவு செய்தது. இந்த சரிவுக்கு முக்கய காரணம் அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான போர் தீவிரமடையும் இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு தான்.

ஆனால் மாலை டிரம்ப் ஈரான் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மின் உற்பத்தி தளத்தையும், எரிபொருள் தளத்தையும் தாக்குவதை நிறுத்துவதாக அறிவித்தார். இதனால் போர் பதற்றம் குறைந்தது.

You May Also Like

டிரம்ப்-ன் பேச்சுவார்த்தை கருத்தை ஈரான் முற்றிலும் பொய் என கூறியுள்ளது, ஆனாலும் டிரம்ப் 5 நாட்களுக்கு ஈரானில் தாக்காது என்பது உறுதியாகும் பட்சத்தில் மாலை 7 மணிக்கு மேல் 2 விஷயம் நடந்தது.

ஈரான் போர் அச்சத்தால் தொடர்ந்து உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை 13 சதவீதம் வரையில் சரிந்தது. இதன் பின்பு தங்கம் விலை பெரும் சரிவில் இருந்து மீண்டது. அதாவது காலை ஸ்பாட் சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 4,099.55 டாலருக்கு சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கம் மாலை வர்த்தகத்தில் 4504 டாலர் வரையில் உயர்ந்தது.

இந்திய MCX சந்தையில் ஏப்ரல் மாதம் பியூச்சர்ஸ் விலை இன்று காலை வர்த்தகத்தில் 1,29,595 ரூபாய் வரையில் சரிந்த நிலையில் மாலை டிரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவுக்கு பின்பு 1,42,300 ரூபாய் வரையில் உயர்ந்தது.

இதன் எதிரொலியாக சென்னை ரீடைல் சந்தையில் இன்று 3வது முறையாக தங்கம் விலையில் மாற்றம் கண்டு காலையில் பதிவான மொத்த சரிவையும் மீட்டு எடுத்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+