சென்னையில் நேற்று விலை குறைந்த தங்கம் இன்று விலை உயர்ந்திருக்கிறது. இந்த வாரத்தில் மட்டும் திங்கள் தொடங்கி இன்று வரை 4 நாட்களில் 2 நாட்கள் தங்கம் விலை உயர்ந்துள்ளது, 2 நாட்கள் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை , மதுரை நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 110 ரூபாய் விலை உயர்வு கண்டு 14,255 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரே நாளில் 880 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,14,040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 120 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,551 ரூபாய்க்கும் 10 கிராம் 1,55,510 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,025 ரூபாய்க்கும் ஒரு சவரன் 96,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
செப்டம்பர் 1 முதல் இன்று வரையிலான 10 நாட்களில் தங்கம் விலை 5 நாட்கள் குறைந்துள்ளது, 4 நாட்கள் உயர்ந்துள்ளது, 1 நாள் விலை மாறவில்லை. இந்த வாரத்திலேயே திங்கள் அன்று விலை சரிந்தது, ஆனால் செவ்வாயன்று விலை கூடியது, இந்நிலையில் புதன்கிழமை விலை குறைந்த தங்கம் இன்று விலை ஏறிவிட்டது. அதாவது ஒரு நாள் விலை ஏறினால் மறுநாள் விலை இறங்குவது என தங்கம் விலை போக்கு மக்களை குழப்புகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை வேகமாக உயர்வு கண்டது. இதனால் செப்டம்பரிலும் இதே நிலை தான் நீடிக்குமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதும் என அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த மாதம் முடிய இன்னும் 20 நாட்கள் இருப்பதால் வரும் நாட்களீல் விலை குறையுமா அல்லது ஆகஸ்டை போல விலை ஏறுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் போர் தீவிரமடைந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் தங்கம் விலை குறையும் அதுவே போர் அமைதியை நோக்கி சென்றால் தங்கம் விலை உயரும். மேலும் அமெரிக்க அரசின் அறிவிப்புகள், டாலர் மதிப்பும் இதில் முக்கிய பங்காற்றுகிறது.
வெள்ளியின் விலை மாறவில்லை, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.55 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.கடந்த 7 நாட்களாக வெள்ளி விலை மாறவில்லை. அதாவது 3ஆம் தேதியில் இருந்து வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.
உலக சந்தையிலும் இன்று தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே உள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 4,414 டாலருக்கு வர்த்தகமாகிறது, வெள்ளி விலையும் ஒரு அவுன்ஸ் 67 டாலராக உள்ளது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை உயர்ந்து 1,53,950 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் விலை உயர்ந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


