ஆசை காட்டி மோசம் செய்த தங்கம்: ஒரே நாளில் மாறிய தங்க சந்தை.. குழப்பத்தில் மக்கள்..

செப்டம்பர் மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. நேற்றைய தினம் குறைந்த தங்கம் விலை, இன்றைய தினம் விலை உயர்ந்துவிட்டது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 140 ரூபாய் விலை உயர்ந்து 14,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரே நாளில் 1,120 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,14,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆசை காட்டி மோசம் செய்த தங்கம்: ஒரே நாளில் மாறிய தங்க சந்தை.. குழப்பத்தில் மக்கள்..

கடந்த 2 வர்த்தக நாட்களில் தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 230 ரூபாயும் , ஒரு சவரனுக்கு 1840 ரூபாயும் விலை குறைந்தது. ஆனால் இன்றைய தினம் கிராமுக்கு 140 ரூபாயும் சவரனுக்கு 1,120 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 152 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,567 ரூபாய்க்கும் 10 கிராம் 1,55,670 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,040 ரூபாய்க்கும் ஒரு சவரன் 96,320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் தொடங்கி 7 வர்த்தக நாட்களில் 4 நாட்கள் தங்கம் விலை குறைந்துள்ளது, 3 நாட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்த மாதம் தங்கம் விலை இப்படி ஏற்ற இறக்கமாக தான் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஈரான் போர், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள், அமெரிக்க டாலர் , மத்திய வங்கிகளின் வட்டி கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் தான் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில் உலக சந்தையிலேயே தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே தான் இருக்கிறது. அது தான் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.

வெள்ளியின் விலை மாறவில்லை, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.55 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.கடந்த 5 நாட்களாக வெள்ளி விலை மாறவில்லை.உலக சந்தையிலும் இன்று தங்கம் விலை உயர்ந்து 4,437 டாலருக்கு வர்த்தகமாகிறது, வெள்ளி விலையும் ஒரு அவுன்ஸ் 67 டாலராக உள்ளது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை உயர்ந்து 1,53,995 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+