தங்கம் விலையில் யூடர்ன்.. வெள்ளி கொடுத்த சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்..!

தங்கம் விலை ரீடைல் சந்தையில் இன்று சரிந்து காணப்பட்டாலும், ரீடைல் சந்தை விலையை நிர்ணயம் செய்யும் ஃபியூச்சர்ஸ் சந்தையிலும், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத ஒரு உயர்வை இன்று பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா - ஈரான், இஸ்ரேல் - காசா போர் பதற்றம் குறையாத நிலையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக டாலர் மதிப்பு உயர்ந்து இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்து காணப்படுகிறது.

 தங்கம் விலையில் யூடர்ன்.. வெள்ளி கொடுத்த சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்..!

கடந்த சில நாட்களின் வர்த்தக சந்தையை பார்க்கும் போது தங்கம் மீண்டும் முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பான முதலீடு தேடும் நிலையின் காரணமாக தங்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய சந்தையிலும் கடந்த 15-20 நாட்களில் நகை கடைகளில் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சந்தையும் தங்கம், வெள்ளிக்கு சாதமாக மாறி வர துவங்கியுள்ளது.

இன்று எம்சிஎஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் அக்டோபர் மாத பியூச்சர்ஸ் ஆர்டர் மதிப்பு 0.59 சதவீதம் அதிகரித்து 1,43,752 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளியின் செப்டம்பர் மாதம் முடியும் ஆர்டரின் மதிப்பு அதிகப்படியாக 2 சதவீதம் வரையில் உயர்ந்து 2,20,210 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

Also Read

இன்றைய எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கத்தை காட்டிலும் வெள்ளி மீதான முதலீடுகள் அதிகரித்த காரணத்தால் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால் மீண்டும் வெள்ளி 4 லட்சம் ரூபாய் அளவீட்டை தொடும் பாதைக்கு திரும்பியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் நகை கடைக்காரர்களும், அதன் அமைப்புகளும் கூறுகையில் இந்தியாவில் ஆதிக் மாசம் முடிந்த பின்பு தங்க நகைக்கான டிமாண்ட் சந்தையில் மெல்ல மெல்ல உயர்ந்து வருவதாக கூறியுள்ளனர். இதேவேளையில் இந்த டிமாண்ட் தொடுமா அல்லது இது வெறும் தற்காலிகமான நிலையா என்ற கேள்விக்கு இன்னும் உறுதியாக பதில் கூற முடியாத நிலையிலேயே சந்தையின் சூழ்நிலைக்கள் உள்ளது என தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் இன்று ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை 0.27 சதவீதம் உயர்ந்து 4066 டாலராக உள்ளது. மேலும் அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் முதலீட்டு சந்தை பெரிய அளவிலான தாக்கத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதேவேளையில் இந்தியாவில் ஆர்பிஐ தனது நாணய கொள்கை முடிவுகளை நாளை வெளியிட உள்ளதால் கூடுதல் எச்சரிக்கை உடன் முதலீட்டு சந்தை இயங்கி வருகிறது.

Recommended For You

அடுத்த மாற்றம்

இதனால் தங்கம், வெள்ளியில் அடுத்து உறுதியான விலை மாற்றம் வர வேண்டுமாயின் 3 காரணங்களால் அது நடக்கும் என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த ஒரு விஷயத்தை பாலோ செய்தாலே முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என புரிந்துக்கொள்ள முடியும்.

1. மத்திய கிழக்கு போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் வேளையில் இதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டால் கட்டாயம் தங்கம் விலையில் உறுதியான மாற்றம் ஏற்படும்.

2. இந்த வாரம் வெளியாகும் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள், அந்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.

3. இதேபோல் இந்த தரவுகள் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையை கட்டுப்படுத்த வேண்டுமா என்பதையும் உறுதி செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+