தங்க விலை திங்களன்று ஆசிய வர்த்தகத்தில் 5000 டாலருக்கு மேல் உயர முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில் 4,970 டாலர் என்ற ஒரு மாத குறைந்த விலைக்கு சரிந்திருந்த தங்கம் இப்போது மீண்டு வரும் அறிகுறிகளை காட்டுகிறது. தங்கத்தை பொருத்த வரையில் முதலீடு செய்ய திட்டமிட வேண்டும் என்றால் சர்வதேச சந்தை விலை, டாலர் மதிப்பை தான் முதலில் பார்க்க வேண்டும்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மத்தியிலான போர் அமெரிக்க டாலர் மதிப்பு வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் பலவீனமடைந்துள்ளது. இதன் மூலம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 92.58ல் இருந்து 92.40 ரூபாயாக குறைந்துள்ளது. இது தங்கத்துக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 14710 ரூபாய் அளவில் உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 276 ரூபாயாக உள்ளது.

போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோக பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் பாதுகாப்பான முதலீடாக மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது. மேலும் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மத்தியிலான போர் முடிவடைய வாய்ப்புகள் மிகவும் குறைவு என பல்வேறு கணிப்புகள் கூறும் வேளையில், அமெரிக்காவின் நிதி இழப்புகள், டாலர் மதிப்பை குறைத்து தங்கத்திற்கு ஆதாரவாக மாறி வருகிறது.
ஆனால் இப்போரில் அமெரிக்காவுக்கு சாதகமாக மாறும் பட்சத்தில் டாலர் மதிப்பு அதிகரித்து, தங்கம் விலை குறையும். இதுதான் தற்போதை தங்கம் விலையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய விஷயமாக உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் கார்க் தீவு பதற்றம்
மத்திய கிழக்கு மோதல் இப்போது 16ஆம் நாளை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்து தடைபடும் அச்சம் உலக சந்தையை பாதித்துள்ளது. இதனால் 70 டாலர்களில் வர்த்தகமான கச்சா எண்ணெய் பேரல் தற்போது 100 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகளுடன் கூட்டணி அமைத்து ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆயினும் அமெரிக்காவின் நிதி நிலை மற்றும் பணவீக்கம் அச்சம் காரணமாக அமெரிக்க டாலர் பலவீனமடைந்துள்ளது. தங்க விலை இந்த பதற்றத்தால் நிலையற்ற நிலையில் உள்ளது.
தங்கம் தொழில்நுட்ப ஆய்வு
தங்க விலை குறுகிய காலத்தில் சிறிய அளவிலான ஏற்றப் போக்கில் உள்ளது. 50 நாள் சிம்பிள் மூவிங் ஆவரேஜ் (SMA) 4,955 டாலர் அளவில் உள்ளது. இதற்கு மேல் தங்க விலை தொடர்ந்து வர்த்தகமாகிறது. மேலும் 100 நாள் SMA 4,575 டாலர் மற்றும் 200 நாள் SMA 4,060 டாலர் ஆகியவற்றுக்கு மேல் விலை இருப்பது நீண்டகால ஏற்றப் போக்கை காட்டுகிறது.
இதேவேளையில் 21 நாள் SMA 5,115 டாலர் அளவில் உள்ளது. ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இன்டெக்ஸ் (RSI) 47 அளவில் உள்ளது. இது நடுநிலை நிலையாக இருப்பதை காட்டுகிறது. இதனால் விற்பனையாளர்களுக்கு இன்னும் வலுவான நிலை இல்லை என்பதே தொழில்நுட்ப டேட்டா காட்டுகிறது.
ஆதரவு நிலைகள் மற்றும் எதிர்காலம்
தங்கத்திற்கு 5,000 டாலர் என்பது உளவியல் ரீதியாக முக்கியமான ஆதரவு நிலை. இது 4,402 முதல் 5,598 டாலர் வரையிலான உயர்வின் 50% ஃபிபோனாச்சி ரெட்ரேஸ்மென்ட் ஆகும்.
இதற்கு கீழே $4,859 (38.2% ஃபிபோனாச்சி) மற்றும் $4,950-$4,575 இடையிலான பகுதி வலுவான ஆதரவாக உள்ளது. இந்த நிலைகளை உடைத்தால் விலை மேலும் குறையலாம். ஆனால் தற்போது லேசான ஏற்றம் தொடரும் என்பதே பெரும்பாலான நிபுணர்களின் கருத்து.
மொத்தத்தில், மத்திய கிழக்கு போர் தங்க விலையை 5,000 டாலருக்கு மேல் உயர்த்தி தொடர்ந்து நிலையாக வைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் கார்க் தீவு பதற்றம் அமெரிக்க டாலரை பலவீனப்படுத்துகிறது. இதேபோல் கச்சா எண்ணெய் விலை உயர்வும் தங்கம் விலை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக உள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் விலையை பார்த்து வாங்குவதற்கு முன்பு, டாலர் மதிப்பு, பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை, போர் பதற்றம் ஆகியவற்றை கணித்து நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யவும்.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications