அக்டோபர் 27-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் நிலையில் எந்த வித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்தைகள் மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. இதற்கு நேர்மாறாக நேற்றைய தினமே தங்கம் விலை கிராமுக்கு ரூ. 65 ரூபாய் அதிகரித்து நகை பிரியர்களுக்கு கவலை அளித்தது.
இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் 7,360 ரூபாயை எட்டியுள்ளது. 24 கேரட் 8,029 என்ற அதிகபட்ச விலையில் விற்பனையாகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை மற்றும் பிற நகரங்களிலும் இன்று தங்கம் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,360 ரூபாயாகவும், 22 கேரட் தங்கத்தின் 1 சவரன் மலை 58,880 ரூபாயாகவும் உள்ளது.

ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,029 ரூபாயை எட்டியுள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 64,232 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் தூய தங்கம். எனவே 22 கேரட் தங்கத்தை விட 24 கேரட் தங்கம் சற்று விலை உயர்ந்ததாக உள்ளது. இதில் பெரிதாக நகைகள் செய்ய முடியாது. ஆனால் 22 கேரட் தங்கத்தோடு பிற உலோகங்களான சில்வர், சிங்க் மற்றும் காப்பர் ஆகியவற்றை கலந்து தங்க நகைகளை வடிவமைக்க முடியும்.
இந்த விலையை வைத்துப் பார்க்கும்போது 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை ரூ.80,000 என்ற உச்ச விலையை எட்டியுள்ளது. 2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்குள் தங்கம் விலை ரூ.1 லட்ச ரூபாயை எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பலரும் தங்க நகைகளை வாங்க திட்டமிட்டு இருப்பார்கள். இதுபோன்ற நபர்களுக்கு தங்கம் விலை அதிகமாக இருப்பது போல தோன்றலாம்.
ஆனால் இனிவரும் நாட்களிலும் இதேபோக்குதான் தொடரும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலை பொறுத்தவரையில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த நேரம் என்று ஜெர்மினேட் இன்வெஸ்டர் சர்விசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தோஷ் ஜோசப் கூறியுள்ளார். ஏனெனில் தற்போது நிலவிவரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் வரவிருக்கும் அதிபர் தேர்தலின் காரணமாக தங்கம் விலையில் ஏற்றம் இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் 107 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,00,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications