செப்டம்பர் 9-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை எந்தவித மாற்றமும் இன்றி சீராக உள்ளது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை அதாவது செப்டம்பர் 6-ஆம் தேதிக்குப் பிறகு 40 ரூபாய் குறைந்த தங்கம் விலை அன்றிலிருந்து இன்று வரை அப்படியே தொடர்கிறது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்று நகைப் பிரியர்களுக்கு கவலை அளித்தது. அதன் பிறகு இந்த மாதம் தொடங்கியதில் இருந்து சிறிது ஏற்றம் இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலையில் கடந்த 3 நாட்களாக எந்த வித மாற்றமும் இல்லை.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,680 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,287 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 53,440 ஆக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,287 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 58,296 ரூபாயாக உள்ளது.
22 கேரட் தங்கம் மற்றும் 24 கேரட் தங்கம் ஆகியவற்றில் இன்றைய நிலவரப்படி எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 18 கேரட் தங்கம் விலை 6 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று 1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 6 ரூபாய் அதிகரித்து 5,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 1 சவரன் 18 கேரட் தங்கத்தின் விலை 48 ரூபாய் அதிகரித்து 43,776 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சமீபகாலமாக தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்கள், 4 நாட்கள் என தொடர்ச்சியாக சீராக இருந்து வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்து 3 நாட்கள் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27 ஆகிய 3 தினங்களிலும் தங்கம் விலை மாறாமல் சீராக இருந்தது. அதன் பிறகு செப்டம்பர் 2, 3, 4, 5 என 4 தேதியிலும் தங்க விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு 50 ரூபாய் ஏறிய தங்கம் விலை மீண்டும் 40 ரூபாய் குறைந்து தொடர்ந்து 3 நாட்களாக சீராக உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 90.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 90,000 ஆகவும் உள்ளது. சர்வதேச வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தே.. இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்து வெள்ளியின் விலை உயரலாம் அல்லது குறையலாம்.


Click it and Unblock the Notifications