ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் தங்க விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதன்படி ஆகஸ்ட் 25, ஆகஸ்டு 26, ஆகஸ்ட் 27-ஆம் தேதியான இன்று வரை தங்கம் விலை சீராக உள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,695 ரூபாய்க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,034 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பதிவில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,695 ஆகவும், அதேபோல் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,304 ஆகவும் உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 53,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 58,432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.93.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 92,500 ஆகவும் உள்ளது. சர்வதேச வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தே.. இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்து வெள்ளியின் விலை உயரலாம் அல்லது குறையலாம்.
கடந்த ஜூலை 30-ஆம் தேதி அன்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 7-ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை சரசரவென ஏறத் தொடங்கியது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி அன்று உச்சத்தை தொட்டது. ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கும் 21-ஆம் தேதிக்கும் இடையில் 380 ரூபாய் அதிகரிப்பு காணப்பட்டது.

அதன் பிறகு தங்கம் விலை 15 ரூபாய் குறைந்து 1 கிராம் 22 கேரட் தங்கம் 6,994 ரூபாய்க்கும் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 7,303 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக இதே விலையில் தான் சீராக உள்ளது.
சுப முகூர்த்த தினங்கள், பண்டிகைகள் போன்ற காலங்களில் தங்கம் விலை உயர்வதற்கு வாய்ப்பு உண்டு. தீபாவளி பண்டிகை வர இருப்பதன் காரணமாகவும் தங்க விலையில் ஏற்றம் இருக்கலாம். தங்கம் வாங்க திட்டமிடுபவர்கள் இது போன்ற தினங்களை கவனித்து விலை குறைவான தினங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications