இந்த வாரம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று சற்று சரிவை கண்டுள்ளது. உலகளாவிய சந்தை, நிலையற்ற தன்மை மற்றும் முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்ததன் காரணமாக இந்த சிறிய விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான வாங்குதல் போன்ற காரணங்களால், தங்கம் விலை இன்னும் உச்சத்திலேயே இருந்து வருகிறது.
இந்திய மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்கள் :இந்தியாவின் எம்.சி.எக்ஸ் (MCX) சந்தையில், 10 கிராம் தங்கம் ரூ.1,22,700 என்ற அளவில் வர்த்தகமானது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.1,48,423 என்ற அளவில் வர்த்தகமானது. சர்வதேச சந்தையில், நேற்று ஒரு அவுன்ஸ் தங்கம் 4,059.05 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு, 4,000 டாலர் என்ற அளவில் இருந்தது.

பின்னர், இன்று முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டும் நோக்கில் பங்குகளை விற்றதால், ஸ்பாட் தங்கம் 0.4% குறைந்து 4,021.99 டாலருக்கு வர்த்தகமானது. அமெரிக்க தங்கம் 0.7% சரிந்து 4,042.60 டாலராக குறைந்தது. நேற்றைய வர்த்தகத்தில், தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் உயர்வுடன் முடிவடைந்தன.
இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான தங்க ஒப்பந்தம் 1.73% உயர்ந்து ரூ.1,23,209 ஆகவும், வெள்ளி ஒப்பந்தம் 2.79% உயர்ந்து ரூ.1,49,855 ஆகவும் நிறைவடைந்தன. தங்கத்தின் விலை ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு 4,050 டாலரை தாண்டியதுடன், வெள்ளி விலை 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக 49 டாலரை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை குறைந்தால் வாங்கலாமா?: தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் தற்போது காணப்படும் சரிவு குறித்து, பிரித்விஃபின்மார்ட் கமாடிட்டி ரிசர்ச் நிறுவனத்தின் மனோஜ் குமார் ஜெயின் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். "தற்போது சந்தையில் முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியேற்றுவதால் விலை சற்று குறைந்திருக்கிறது. ஆனால், இந்த விலை சரிவை நீண்டகால முதலீட்டாளர்கள், மீண்டும் தங்கத்தை வாங்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக கருதலாம்.
இந்த வாரம் முழுவதும், அமெரிக்க டாலர் குறியீட்டின் மதிப்பு மாறுவது மற்றும் உலகளாவிய சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றே எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது உள்ள விலையில், புதிய முதலீடுகளை தொடங்கும் முன் பொறுமையாக இருக்க வேண்டும். விலைகள் மேலும் குறையும் வரை காத்திருக்க வேண்டும். அதே சமயம் குறுகிய கால விற்பனையை தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்துக்கான வர்த்தக இலக்குகள் : தங்கம் ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு 3,910 டாலர் முதல் 4,140 டாலர் வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வெள்ளி ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு 45.90 டாலர் முதல் 50.00 டாலர் வரை வர்த்தகமாக வாய்ப்புள்ளது.
முக்கிய நகரங்களில் இன்றைய நிலவரம் (8 கிராம்) : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.91,960 ஆகவும், 24 கேரட் ரூ.98,832 ஆகவும் குறைந்த விலையில் காணப்படுகிறது. டெல்லியில் 22 கேரட் தங்கம் ரூ.92,560-க்கும், 24 கேரட் ரூ.99,608-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில், 22 கேரட் ரூ.92,720-ஆகவும், 24 கேரட் தங்கம் ரூ.99,696-ஆகவும் உள்ளது. ஹைதராபாத்தில் 22 கேரட் தங்கம் ரூ.92,224-ஆகவும், 24 கேரட் தங்கம் ரூ.99,136-ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications