தமிழ்நாட்டில் கடந்த வாரம் முழுவதும் வேகமாக சரிந்து வந்த தங்கம் விலை கடந்த 3 வர்த்தக நாட்களாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை லேசாக விலை ஏறியுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் விலை உயர்ந்து 13,135 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 400 ரூபாய் விலை கூடி 1,05,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த வாரம் திங்கள்கிழமை லேசாக விலை உயர்ந்த தங்கம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என நான்கு நாட்களும் பெரிய சரிவை சந்தித்தது. பின்னர் சனிக்கிழமை கிராமுக்கு 10 ரூபாய் விலை கூடியது. திங்கள்கிழமையான நேற்று கிராமுக்கு 15 ரூபாய் விலை அதிகரித்தது. இன்று தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 3 வர்த்தக நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாயும் சவரனுக்கு 600 ரூபாயும் அதிகரித்துள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,329 ரூபாய்க்கும் 10 கிராம் 1,43,290 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் 86,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 220 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.20 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 4 நாட்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது. இதில் வட்டி உயர்வு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,009 டாலர்களாக உள்ளது. சில தினங்களாகவே தங்கம் விலை பெரிதாக ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை. உலக சந்தையில் தங்கம் விலை பெரிதாக ஏறாமல் இருப்பதே இந்தியாவிலும் தங்கம் விலை பெரிதாக மாறாமல் இருக்க காரணம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

