நவம்பர் 23-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்திருக்கிறது. நேற்றைய தினம் 80 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,300 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,964 ரூபாயாகவும் உள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவடைந்த பிறகு ரூ.7,000-த்திற்கும் குறைவாக விற்கப்பட்ட 22 கேரட் தங்கம் விலை தற்போது ரூ.7,300-ஐ எட்டியுள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 75 ரூபாய் அதிகரித்து ரூ.7,300-ஐ எட்டியுள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.600 அதிகரித்து ரூ.58,400-க்கு விற்பனையாகிறது. 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.750 அதிகரித்து ரூ.73,000-த்திற்கு விற்பனையாகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.82 அதிகரித்து ரூ.7,964-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.656 அதிகரித்து ரூ.63,712-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.820 அதிகரித்து ரூ.79,640க்கும் விற்பனையாகிறது.
அக்டோபர் 31-ஆம் தேதி அன்று தங்கம் விலை உச்சபட்ச விலையை எட்டியது. இதனால் 22 கேரட் தங்கம் ரூ.7,445க்கு விற்பனையானது. அதன் பிறகு குறைந்து வந்த தங்கம் விலை கடந்த நவம்பர் 14-ஆம் தேதி அன்று ரூ.6,935 ஆக குறைந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி 7,300-ஐ எட்டியுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்தைகள் மூடப்பட்டிருக்கும் இதனால் தங்கம் விலையில் மாற்றம் இருக்காது. ஒருவேளை திங்கட்கிழமை மீண்டும் தங்கம் விலை அதிகரித்தால் புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு சிக்கலாக இருக்கலாம்.
நவம்பர் மாதம் தொடங்கி விட்டால் திருமண சீசன் தொடங்கிவிடும். இனிவரும் நாட்களில் பல முகூர்த்த தினங்கள் வர உள்ளதால் டிமாண்ட் காரணமாக தங்கம் விலை உயரவும் வாய்ப்புள்ளது.
வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் விற்பனையாகிறது. கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் வெள்ளி 101 ரூபாயாக உள்ளது. 1 கிலோ வெள்ளி 1,01,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications