செப்டம்பர் 23-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் சனிக்கிழமையன்று கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து நாட்டு மக்களுக்கு ஷாக் அளித்தது. இன்றும் அதே போல தங்கம் விலை ஏறி உள்ளது. தங்கம் விலையின் தொடர் அதிகரிப்பு இனிவரும் காலங்களிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சரி இன்றைய நிலவரப்படி கோவை மதுரையில் தங்கம் விலையை பார்ப்போம்.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,980 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,615 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 6,980 ரூபாயாக உள்ளது. தோராயமாக சொல்லப்போனால் 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,000 ரூபாயை நெருங்குகிறது. 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 55,840 ஆக உள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 22 ரூபாய் அதிகரித்து 7,615 ரூபாய்க்கு விற்பனையாகிறது, 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 176 ரூபாய் அதிகரித்து 60,920 ரூபாயாக உள்ளது.
ஒரு கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 17 ரூபாய் அதிகரித்து 5,718 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 18 கேரட் தங்கம் விலை 136 ரூபாய் அதிகரித்து 45,744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு முன் தினமான சனிக்கிழமை அன்று 75 ரூபாய் கிராமுக்கு அதிகரித்தது. இதனால் சவரனுக்கு ரூ.744 வரை உயர்ந்து காணப்பட்டது.
தங்கம் விலையில் ஏற்பட்டிருக்கும் இந்த விலை ஏற்றம் சிறு முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த வருமானம் ஈடுபவர்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக தங்கத்தில் தான் காலங்காலமாக முதலீடு செய்து வருகின்றனர். சிறுக சிறுக தங்கள் பிள்ளைகளுக்காக தங்கம் வாங்கி வைக்கும் பல இந்திய குடும்பங்களுக்கு இந்த விலையேற்றம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி விலை சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 98,000 ரூபாயாக உள்ளது. இன்றைய தினம் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.


Click it and Unblock the Notifications