அக்டோபர் 29-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து நகை பிரியர்களுக்கு ஷாக் தந்தது. நேற்றைய தினம் 40 ரூபாய் குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் தந்தேராஸ் பண்டிகையின் போது பலரும் தங்க நகைகளை வாங்குவது வழக்கம். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ரீடெய்ல் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,375 ரூபாயாகவும் அதேபோல 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.8,405 ஆகவும் உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்துள்ளது.

1 கிராம் 22 கேரட் தங்கம் 7,375 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் 480 ரூபாய் அதிகரித்து 59,000-த்தை எட்டியுள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து ரூ.8,405 ரூபாயை எட்டியுள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 520 ரூபாய் அதிகரித்து 64,360 ரூபாயாக உள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது தங்க நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு இந்த விலை ஏற்றம் பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது. சமீப காலமாக தங்கத்தின் விலை கடும் உயரத்தை எட்டி வருகிறது. இதனால் 10 கிராம் 24 கேரட் தங்கம் 80,450 என்ற உச்ச விலையை எட்டியுள்ளது. அதே போல 22 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை 73,750 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் தூய தங்கம். இதனால் இவற்றை வளைத்து முறுக்கி தங்க நகைகளை செய்ய முடியாது. எனவே 24 கேரட் தங்கத்தை கோல்ட் பார் அல்லது கோல்ட் காயின் மூலமாக வாங்கலாம்.
2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டி விடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒருவேளை பட்ஜெட்டில் சுங்கவரி குறையாமல் இருந்திருந்தால் இந்நேரம் தங்கம் விலை ரூ.1 லட்ச ரூபாயை எட்டி இருக்கும் என்றும் சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டிமாண்ட் அதிகரிப்பது, மத்திய மாநில அரசு வரி, புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்றவையே தங்க விலை உயர்வுக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 108 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,08,000 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications