Gold Rate: தொடர்ந்து 5ஆவது நாளாக விலை உயர்வு..!! ஜூலை மாதத்திலேயே இது தான் முதன்முறை..!!

ஜூலை மாதத்திலேயே முதன்முறையாக தங்கம் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழ்நாட்டில் பிரதான நகரங்களான சென்னை, மதுரை , கோவை , திருச்சி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் நேற்று 13,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று 70 ரூபாய் விலை உயர்ந்து 13,500 ரூபாய் ஆக விற்பனையாகிறது. இந்த மாதத்திலேயே தொடர்ந்து 5 நாட்கள் தங்கம் விலை உயர்வது இதுவே முதன்முறையாகும். இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 560 ரூபாய் விலை உயர்ந்து 1,08,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை மதுரை , கோவை , திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஆபரண தங்கம் இதே விலைக்கு தான் விற்கப்படுகிறது.

Gold Rate: தொடர்ந்து 5ஆவது நாளாக விலை உயர்வு..!! ஜூலை மாதத்திலேயே இது தான் முதன்முறை..!!

கடந்த சனிக்கிழமை முதல் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணமே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 5 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 400 ரூபாயும், ஒரு சவரனுக்கு 3,200 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 14,728 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,47,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 5ஆவது நாளாக 24 கேரட் தங்கத்தின் விலையும் உயர்ந்திருக்கிறது. 18 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 11,315 ரூபாய்க்கும் ஒரு சவரன் 90,520 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Also Read

தொடர்ந்து மூன்று நாட்களாக மாறாமல் இருந்த வெள்ளியின் விலை நேற்று, அதற்கு முந்தைய தினம் என இரண்டு நாட்களும் விலை உயர்ந்தது. ஆனால் இன்று வெள்ளியின் விலை மாறவில்லை. அந்த வகையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.45 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.

Recommended For You

இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 10 கிராம் தங்கம் விலை 1,45,303 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. உலக சந்தையில் ஒரே நாளில் தங்கம் விலை உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,120 டாலராக வர்த்தகமானது. நேற்று விலை ஏறிய நிலையில் இன்று அதே விலையில் தான் நீடிக்கிறது. இதனால் தான் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் குறுகிய காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏறி மீண்டும் இறங்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+