நவம்பர் 6-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 15 ரூபாய் குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,365 ரூபாயாகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 8,035 ரூபாயாகவும் உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 7,365 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 80 ரூபாய் அதிகரித்து 58,920 ரூபாயாக இருக்கிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 11 ரூபாய் அதிகரித்து 8,035 ரூபாயாகவும், 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 88 ரூபாய் அதிகரித்து 64,280 ரூபாயாகவும் இருக்கிறது.

தங்க விலை மற்றும் வெள்ளி விலை பெரும்பாலும் உலகளாவிய நிகழ்வுகளை பொறுத்து மாறுபடுகிறது. வரவிருக்கும் நாட்களில் தங்கம் விலையில் என்னனென்ன மாற்றங்கள் நிகழும் என்ற தெளிவுக்காக தற்போது முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். அமெரிக்க தேர்தல் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
தற்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில் வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள், பொருளாதாரக் கொள்கைகள், வர்த்தக உறவுகள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவை தங்க விலையை பாதிக்கும் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
இது மட்டுமின்றி மத்திய மாநில அரசு வரிகள், உள்ளூர் சங்கங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் விலை என மற்ற காரணங்களும் தங்கம் விலையை பாதிக்கிறது.கடந்த ஜூலை 23-ஆம் தேதி அன்று பட்ஜெட் அறிவிப்பில் வெளியான சுங்க கட்டண குறைப்பின் காரணமாக ரீட்டைல் விற்பனையாளர்கள் அதிக அளவில் தங்க நகைகளை ஸ்டாக் செய்தனர். இதன் காரணமாக 2025-ஆம் நிதியாண்டில் ரீடைல் விற்பனையாளர்களின் வருவாய் 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 105 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,05,000 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications