செப்டம்பர் 11-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதம் முதலே தங்கம் விலை சீராக இருந்ததால் மகிழ்ச்சியில் இருந்த முதலீட்டாளர்களுக்கு.. இன்றைய தினம் சற்று கவலை அளிக்கும் வகையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் கிராமுக்கு 3 ரூபாய் குறைந்திருந்தது. அதற்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள் சீராக ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று சவரனுக்கு 304 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,715 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.7,325 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோவை மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ.38 ரூபாய் அதிகரித்து 6,715 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 34 ரூபாய் அதிகரித்த 53,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 41 ரூபாய் அதிகரித்து 7,325 ரூபாயாக உள்ளது, 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 328 ரூபாய் அதிகரித்து 58,600 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 32 ரூபாய் அதிகரித்து 5,501 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 18 கேரட் தங்கத்தின் விலை 256 ரூபாய் அதிகரித்து 44,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி 10 கிராம் தங்கம் விலை தோராயமாக 410 வரையில் அதிகரித்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு நகைப் பிரியர்களுக்கு ஷாக் தந்துள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று 1 கிராம் வெள்ளி 91.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 1 கிலோ வெள்ளி விலை 91,500 ரூபாயாக உள்ளது.
தங்கம் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த மக்களுக்கு இன்றைய தினம் சாதகமாக இல்லை. நேற்று 3 ரூபாய் குறைந்திருந்த நிலையில் இன்றைய தினம் அதற்கு நேர்மாறாய் 38 ரூபாய் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications