தங்கம் விலை 3 வார உச்சம்.. சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..!!

தங்கத்தை வெறும் நகையாக, லைப்ஸ்டைல் பொருளாக பார்ப்பதை தாண்டி இன்று அனைத்து தரப்பும் மக்களும் தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாக பார்க்கும் எண்ணம் வந்துள்ளது. முன்பு இது குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மட்டுமே தங்கத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்தனர், ஆனால் தற்போது நிலை முற்றிலும் மாறியுள்ளது.

இதனாலேயே இந்தியாவில் தங்கம் மீதான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தங்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் காரணத்தால் இதை குறைக்க மத்திய அரசு மக்கள் நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்வதை தடுக்க தங்க முதலீட்டு பத்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.

தங்கம் விலை 3 வார உச்சம்.. சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..!!

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மக்கள் தங்கம் வாங்குவது குறைவதில்லை, இதேவேளையில் சர்வதேச முதலீட்டு சந்தை நிலவரம், பங்குச்சந்தை முதலீடு, நாணய மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை மாறுபடுகிறது.

இன்றைய வர்த்தகத்தில் டாலர் மற்றும் அரசு பத்திர முதலீட்டில் ஏற்பட்ட முதலீட்டு லாபத்தில் பதிவான தடுமாற்றம், இன்று தங்கம் விலை 3 வார உச்சத்தை எட்டியுள்ளது. இதேவேளையில் அமெரிக்க அரசு பத்திர முதலீட்டு லாபம் 20 வருட உச்சத்தில் இருந்து சரிந்துள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளனர்.

இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1914 டாலரில் இருந்து 1925.52 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.11 சதவீதம் உயர்ந்து 58,954.00 ரூபாயாக உள்ளது. 1 கிலோ வெள்ளி விலை 0.17 சதவீதம் உயர்ந்து 73,740 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 55,200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 470 ரூபாய் உயர்ந்து 60,220 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் அதிகரித்து 44,160 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 200 ரூபாய் உயர்ந்து 80,200 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,200 ரூபாய், மும்பை - 54,700 ரூபாய், டெல்லி - 54,850 ரூபாய், கொல்கத்தா - 54,700 ரூபாய், பெங்களூர் - 54,700 ரூபாய், ஹைதராபாத் - 54,700 ரூபாய், கேரளா - 54,700 ரூபாய், புனே - 54,700 ரூபாய், பரோடா - 54,750 ரூபாய், அகமதாபாத் - 54,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,850 ரூபாய், லக்னோ - 54,850 ரூபாய், கோயம்புத்தூர் - 55,200 ரூபாய், மதுரை - 55,200 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,220 ரூபாய், மும்பை - 59,670 ரூபாய், டெல்லி - 59,820 ரூபாய், கொல்கத்தா - 59,670 ரூபாய், பெங்களூர் - 59,670 ரூபாய், ஹைதராபாத் - 59,670 ரூபாய், கேரளா - 59,670 ரூபாய், புனே - 59,670 ரூபாய், பரோடா - 59,720 ரூபாய், அகமதாபாத் - 59,720 ரூபாய், ஜெய்ப்பூர் - 59,820 ரூபாய், லக்னோ - 59,820 ரூபாய், கோயம்புத்தூர் - 60,220 ரூபாய், மதுரை - 60,220 ரூபாய்.

தங்கம் விலை 3 வார உச்சம்.. சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..!!

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44160 ரூபாய், மும்பை - 43760 ரூபாய், டெல்லி - 43880 ரூபாய், கொல்கத்தா - 43760 ரூபாய், பெங்களூர் - 43760 ரூபாய், ஹைதராபாத் - 43760 ரூபாய், கேரளா - 43760 ரூபாய், புனே - 43760 ரூபாய், பரோடா - 43800 ரூபாய், அகமதாபாத் - 43800 ரூபாய், ஜெய்ப்பூர் - 43880 ரூபாய், லக்னோ - 43880 ரூபாய், கோயம்புத்தூர் - 44160 ரூபாய், மதுரை - 44160 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 80200 ரூபாய், மும்பை - 77100 ரூபாய், டெல்லி - 77100 ரூபாய், கொல்கத்தா - 77100 ரூபாய், பெங்களூர் - 75700 ரூபாய், ஹைதராபாத் - 80000 ரூபாய், கேரளா - 80000 ரூபாய், புனே - 77100 ரூபாய், பரோடா - 77100 ரூபாய், அகமதாபாத் - 77100 ரூபாய், ஜெய்ப்பூர் - 77100 ரூபாய், லக்னோ - 77100 ரூபாய், கோயம்புத்தூர் - 80200 ரூபாய், மதுரை - 80200 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+