தங்கம் விலை 2 நாளில் ரூ.1000 சரிவு.. இதுமட்டும் நடந்துட்டா தங்கம் தரையை தட்டும்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து இந்திய மிடில் கிளாஸ் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வந்த நிலையில், மக்கள் மாற்று முதலீட்டை தேடி வரும் சூழ்நிலையில் இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல்ல உலக சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது, முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 2 வாரமாக தொடர்ந்து அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 10,300 ரூபாய் வரையில் உயர்ந்து அதிர்ச்சி அளித்து. இது கிட்டத்தட்ட நாட்டின் 20 சதவீத மக்களின் ஒரு மாத சராசரி சம்பளம் என்றால் மிகையில்லை. இந்த சூழ்நிலையில் தங்கம் விலையின் நிலைமையை மாற்றும் வகையில் தங்கம் விலை 2 நாளாக குறைந்தள்ளது. இதற்கு முக்கியம் உள்ளது..!!

Gold Rate: 2நாளில் ரூ1000 சரிவு, இதுமட்டும் நடந்துட்டா தங்கம் தரையை தட்டும்! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 700 ரூபாய் குறைந்து 93,750 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 760 ரூபாய் உயர்ந்து 1,02,280 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த 2 நாளில் ஒரு கிராமுக்கு 1000 ரூபாய் குறைந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 560 ரூபாய் குறைந்து 75,000 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 1,27,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 330 ரூபாய் குறைந்து 37,130 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை 2 நாளாக சரிய முக்கியம காரணம் அமெரிக்க மண்ணில் டிரம்ப் - புடின் சந்திப்பு தான்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பேச்சுவார்த்தைகள் மற்றும் அமெரிக்காவின் ஜூலை மாத பணவீக்க தகவல்கள் காரணமாக தங்கம் விலை கடந்த 2 நாளாக குறைந்து வருகிறது. இதோடு முக்கியமாக அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் அடுத்த வட்டி விகித குறைப்பு குறித்த தகவல்களும் தங்கம் விலை சரிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

பொருளதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும் நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீட்டுக்கான தேவை குறைந்து, விலை சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்க-ரஷ்ய பேச்சுவார்த்தையின் தாக்கம்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9, 2025) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் சந்தித்து உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்த உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு, உக்ரைன் போர் பதற்றத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சிட்டி இண்டெக்ஸ் மூத்த ஆய்வாளர் மாட் சிம்ப்சன் கூறுகையில், "உக்ரைன் போரை சுற்றியுள்ள அரசியல் பதற்றம் குறைவதால், தங்க விலை சரிந்தது" என்றார். இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் தங்கம் போன்ற பாதுகாப்பு முதலீடுகளின் தேவையை குறைத்துள்ளது என்றும் உறுதி செய்தார்.

Gold Rate: 2நாளில் ரூ1000 சரிவு, இதுமட்டும் நடந்துட்டா தங்கம் தரையை தட்டும்! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

சர்வதேச சந்தை:
இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் ஸ்பாட் கோல்டு விலை 0.7% சரிந்து ஒரு அவுன்ஸுக்கு 3,368.49 டாலர்களாக உள்ளது. இது கடந்த ஜூலை 23 முதல் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த நிலையை அடைந்த நிலையில் திங்கட்கிழமை தங்கம் விலை சரிந்துள்ளது. அதேபோல், டிசம்பர் மாத டெலிவரிக்கான அமெரிக்க கோல்டு பியூச்சர் 1.4% குறைந்து 3,441.20 டாலர்களாக உள்ளன.

இந்த சரிவு, சந்தை பங்கேற்பாளர்கள் அமெரிக்க பொருளாதார குறியீடுகளை நெருக்கமாக கவனித்து வருவதால் ஏற்பட்டுள்ளது. தங்கம், வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் சூழலில் மட்டுமே நன்கு செழித்து வளரும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்க வட்டி விகிதம்:
சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை எதிர்பார்த்ததை விட நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்ததால், செப்டம்பர் மாதம் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளதாக சந்தைகள் கணிப்புகள் கூறுகிறது. செப்டம்பர் மாத வட்டி குறைப்பிற்கு சுமார் 90% வாய்ப்பு உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் ஒரு முறை வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையும், தங்கத்தின் விலை மீதான நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பென்ச்மார்க் வட்டி விகித சூழல் தங்கம் போன்ற பொருட்களுக்கு சாதகமாக அமையும் என்றாலும், உக்ரைன் பேச்சுவார்த்தையின் வெற்றி இதை மாற்றியுள்ளது.

தங்கம் முதலீட்டுக்கு அட்வைஸ்:
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தை வெற்றி பெறினும், அமெரிக்க பணவீக்க தகவல்கள் மற்றும் வட்டி விகித முடிவுகள் தங்க விலையை பாதிக்கலாம். இந்த நிலையில் முதலீட்டாளர்கள், இந்த சூழலை கவனமாக ஆய்வு செய்து தங்கள் முதலீடு உத்திகளை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+