தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் ஆபரணத் தங்கம் விலையானது சற்றே சரிவில் காணப்படுகின்றது.
இது வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் அமெரிக்கா வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இன்று தங்கம் விலை என்ன? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? தற்போது சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கலாம்
அமெரிக்காவின் சேவைத் துறையானது மேம்பட்டு வரும் நிலையில், இது வேலை வாய்ப்பினையும் ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் பொருளாதார வளர்ச்சியானது மேம்பட்டு வருவதையே இது காட்டுகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் மத்திய வங்கியானது 5.5% - 5.75% என்ற விகிதத்தினை எதிர்பார்க்கலாம். ஆக இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். மொத்தத்தில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4.80 டாலர் அதிகரித்து, 1859.55 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.28% அதிகரித்து, 21.308 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 185 ரூபாய் அதிகரித்து, 55,906 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 319 ரூபாய் குறைந்து, 64,720 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக காணப்படுகிறது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 5250 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 42,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 5727 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 57,270 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 70.60 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 70,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications