சென்னை: பொதுவாகவே இந்தியக் குடும்பங்களில் தங்கம் ஒரு மதிப்புமிக்க சொத்தாகக் கருதப்படுகிறது. தங்கத்தில் போடப்படும் பணம் நிச்சயம் சேமிப்பு தான் என்பதே நாட்டில் உள்ள பலரின் எண்ணமாக உள்ளது. இந்த வருடத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உயரத்தை தொட்டாலும், அதன் மவுசு மட்டும் குறையவே இல்லை.
இந்நிலையில் தங்கத்தின் விலை சீக்கிரம் ரூ. 2 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விலை ஏறினால் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கடந்த 9 ஆண்டுகளில், தங்கத்தின் விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 1987 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 2,570 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு 19 ஆண்டுகளுக்குப் பின் 2006 ஆம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 8,250 ரூபாயாக உள்ளது. அதாவது சுமார் 6 முதல் 8 வருடங்களுக்குள் மூன்று முறை இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்று எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
இதே நிலைமை நீடிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 2 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில முதலீட்டாளர்கள், இந்த மைல்கல்லை எட்ட இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். தங்கத்தின் விலை பொதுவாக புவிசார் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிலைகளை பொறுத்து மாறுபடும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பணவீக்கம், புவிசார் பதட்டங்கள் பாண்டமிக் காலக்கட்டம் மற்றும் வார் போன்ற காரணங்களால் கிட்டத்தட்ட 75 % தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
LKP செக்யூரிட்டிஸின் ஆராய்ச்சியாளர் ஜதீன் திரிவேதி, புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் போன்ற முக்கிய உலகளாவிய மாற்றங்கள் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதுவும் குறுகிய காலத்திற்குள் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதுபோன்ற விலை ஏற்றத்தின் காரணமாக அடுத்த 7 முதல் 12 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ரூ. 2 லட்சத்தை எட்டும் என்று கூறியுள்ளார்.
நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டின் நிதி மேலாளரும், தலைவருமான விக்ரம் தவான், தங்கத்தின் விலை கடந்த 19 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தைத் தரும் என்று கூறியுள்ளார்.
தங்கத்தில் முதலீடு செய்தால் சீக்கிரம் மும்மடங்காகும் என்ற எதிர்பார்ப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தற்போதைய நிலையில் பணவீக்கம், புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகிய காரணங்களுக்கு மத்தியில் ஒரு நிலையான முதலீடாக தங்கம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்னதான் Bitcoin மற்றும் Ethereum போன்ற கிரிப்டோகரன்சிகள் பிரபலமான மற்றும் சாத்தியமான வருமானத்திற்காக கவனத்தைப் பெற்றிருந்தாலும், முதலீட்டாளர்கள், அதன் நிலையான தன்மை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர்.
எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானது என்று பல நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
More From GoodReturns

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications